கதை முடிந்தது.. டிவி சேனல்கள்.. ஓடிடி சந்தா.. ரூ.299-க்கு எல்லாம் மாறுது.. 365 நாட்கள் சேவை.. அம்பானி ஆட்டம்!
டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி கன்டென்ட்கள், டிவி ஷோக்கள் போன்ற சலுகைகளை 4K ரெசொலூஷனில் வழங்குவது மட்டுமல்லாமல், 365 நாட்களுக்கான சந்தாவை வெறும் ரூ.299 விலையில் கொடுத்து ஒட்டுமொத்த மார்கெட்டையும் ஜியோசினிமா (JioCinema) அதிரவிட்டுள்ளது. இப்போது, வருடாந்திர பிரீமியம் திட்டம் அறிமுகமாகிவிட்டது.
ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium) திட்டங்களில் பிரீமியம் மாதாந்திரம், பிரீமியம் வருடாந்திரம் மற்றும் பிரீமியம் ஃபேமிலி என்று 3 திட்டங்கள் இருக்கின்றன. இதில் பிரீமியம் வருடாந்திர திட்டம் புதிதாக அறிமுகமாகி ஜியோ கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற ஓடிடி பிரியர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.

ஏனென்றால், மற்ற ஓடிடி நிறுவனங்கள் தங்களது மூன்று மாத திட்டங்களுக்கு நிர்ணயம் செய்யும் விலையில், இதில் 12 மாதங்களுக்கான சந்தா கிடைக்கிறது. இந்த திட்டம் 50 சதவீத சலுகையில் கொடுக்கப்படுவதால், விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ஜியோ கஸ்டமர்கள் அறக்க பறக்க ரீசார்ஜ் செய்து வருகிறார்கள்.
ஜியோசினிமா ரூ 199 திட்ட விவரங்கள் (JioCinema Rs 199 Plan Details): இந்த ஜியோசினிமா பிரீமியம் வருடாந்திர திட்டத்தில் (JioCinema Premium Annual Plan) 4K ரெசொலூஷனில் வீடியோ கன்டென்ட்களை பார்க்கலாம். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் போன்ற சீரிஸ்களை வழங்கும் எச்பிஓ (HBO) சந்தா கிடைக்கிறது.
அதேபோல டிரான்ஸ்பார்மர்ஸ், டாப் கன் போன்ற ஹாலிவுட் மூவிக்களை வழங்கும் பாரமவுண்ட் பிளஸ் (Paramount Plus) சந்தா கொடுக்கப்படுகிறது. இதுபோக வழக்கமாக ஜியோசினிமாவில் கிடைக்கும் புதுப்புது திரைப்படங்களை பார்க்கலாம். லைவ் டிவி சேனல்களை பொறுத்தவரையில், கலர்ஸ் நெட்வொர்க்கின் அனைத்து சேனல்களும் கிடைக்கும்.
இதில் கலர்ஸ் தமிழ் எச்டி சேனலும் அடங்கும். மேலும், நிக் எச்டி, நியூஸ்18 இந்தியா, சிஎன்என்நியூஸ18, எம்டிவி எச்டிபிளஸ் போன்ற லைவ் சேனல்களை பார்த்து கொள்ளலாம். அதேபோல அந்த சேனல்களின் ஷோக்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இதுபோன்ற பல்வேறு கன்டென்களை ஜியோசினிமா பிரீமியம் வழங்குகிறது.
இந்த ஜியோசினிமா பிரீமியம் திட்டத்துக்கு 365 நாட்கள் சந்தா கொடுக்கப்படுகிறது. அதற்கு பிறகு இந்த திட்டத்துக்கு ரூ.599 செலுத்த வேண்டும். ஏனென்றால், இப்போது 50 சதவீத தள்ளுபடியில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரு டிவைஸ் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு மேல் வேண்டுமானால், ஃபேமிலி திட்டத்தை பெறலாம்.
ஜியோசினிமா ரூ 89 திட்ட விவரங்கள் (JioCinema Rs 89 Plan Details): இதுவொரு மாதாந்திர ஃபேமிலி திட்டமாகும். இந்த திட்டத்தின் விலை ரூ.149ஆக இருந்தது. ஆனால், இப்போது 40 சதவீத தள்ளுபடியில் ரூ.89 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் மேற்கூறிய அனைத்து சலுகைகளும் கொடுக்கப்படும்.
ஆனால், ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தலாம். ஆகவே, டிவி மொபைல், லேப்டாப், டேப்லெட் என்று ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களிலும் வீடியோ கன்டென்ட்களை பார்த்து கொள்ளலாம். இதைவிட மலிவான விலையில் மற்றொரு ஜியோசினிமா பிரீமியம் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்துக்கும் 1 மாதம் மட்டுமே சந்தா கொடுக்கப்படுகிறது.
ஜியோசினிமா ரூ 29 திட்ட விவரங்கள் (JioCinema Rs 29 Plan Details): இந்த ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தில் ஒரே டிவைஸ் மட்டுமே பயன்படுத்த முடியும். இருப்பினும், மேற்கூறிய அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு பெற்று கொள்ளலாம். இந்த மூன்று பிரீமியம் திட்டங்களிலும் லைவ் டிவி மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸ்களுக்கு மட்டும் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








