அடுத்த வசூலை ஆரம்பித்த அம்பானி.. JioCinema பயன்படுத்த கட்டணம்.. 1 ஆண்டு திட்டம் அறிமுகம்.. என்ன விலை?
சொன்னபடியே முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் (Streaming Platform) ஆன ஜியோசினிமா ஆப்பிற்கான முதல் சந்தா திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium) என்று அழைக்கபடும்.
ஜியோசினிமா ப்ரீமியம் திட்டத்தின் விலை நிர்ணயம் என்ன? இந்த திட்டத்தின் கீழ் என்ன மாதிரியான கன்டென்ட்கள் அணுக கிடைக்கும்? இந்த திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் எத்தனை டிவைஸ்களை பயன்படுத்த முடியும்? ஜியோசினிமா ப்ரீமியம் பிளானை சப்ஸ்க்ரைப் (Subscribe) செய்வது எப்படி? இதோ விவரங்கள்:

ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தின் விலை என்ன? ஜியோசினிமா ஆப்பில் ஓராண்டு திட்டமாக, அதாவது 12 மாதங்கள் அல்லது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் (1 Year Validity) கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டத்தின் விலை ரூ.999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எந்தவொரு டிவைஸ் வழியாகவும் ஹாலிவுட் கன்டென்ட்டை மிக உயர்ந்த வீடியோ மற்றும் ஆடியோ குவாலிட்டியில் (High Video and Audio Quality) பார்க்க முடியும். மேலும் ஜியோசினிமா பிரீமியம் திட்டமானது, ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்யவும் அனுமதிக்கும்.
தற்போது வரையிலாக ஜியோசினிமாவின் கீழ் பிரீமியம் என்கிற ஒரே ஒரு சந்தா திட்டம் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைவிட மலிவான திட்டங்கள் அல்லது குறைவான வேலிடிட்டியை வழங்கும் திட்டங்கள் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம். அந்த திட்டங்கள் 1 மாதம் முதல் 3 மாதம் வரையிலான வேலிடிட்டியை வழங்கலாம்.
ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தின் கீழ் என்னென்ன கன்டென்ட்களை பார்க்கலாம்? இந்த திட்டத்தின் கீழ் பலவகையான எச்பிஓ நிகழ்ச்சிகளை (HBO Shows) பார்க்க முடியும். அதாவது தி லாஸ்ட் ஆஃப் அஸ் (The Last of Us), ஹவுஸ் ஆஃப் தி டிராகன் (House of the Dragon), செர்னோபில் (Chernobyl) போன்றவைகளை பார்க்கலாம்.
மேலும் கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones). ஒயிட் ஹவுஸ் பளம்பர்ஸ் (White House Plumbers), ஒயிட் லோட்டஸ் (White Lotus), வின்னிங் டைம் (Winning Time), பாரி (Barry) சக்ஸஷன் (Succession), பிக் லிட்டில் லைஸ் (Big Little Lies), வேஸ்ட் வோர்ல்ட் (Westworld), சிலிகான் வேலி (Silicon Valley), ட்ரூ டிடெக்டிவ் (True Detective) என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
எச்பிஓ நிகழ்ச்சிகளை தவிர்த்து ஜியோசினிமா வழியாக ஹாரி பாட்டர் (Harry Potter) திரைப்படங்கள், தி டார்க் நைட் ட்ரைலாஜி ( Dark Knight Trilogy), பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் மற்றும் ஜஸ்டிஸ் லீக் (Justice League) போன்ற வார்னர் பிரதர்ஸ் கன்டென்ட்களையும் (WarnerBros Content) ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
ஜியோசினிமா ப்ரீமியம் பிளானை சப்ஸ்க்ரைப் செய்வது எப்படி? ஜியோசினிமாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஜியோசினிமா ஆப்பிற்கு சென்று, ஸ்க்ரீனின் மேற்புறத்தில் உள்ள புதிய சப்ஸ்க்ரைப் ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது ரூ.999 மதிப்புள்ள ஜியோசினிமா பிரீமியம் சந்தாவை காண்பீர்கள்
அதில் "Continue and pay Rs 999" என்பதை கிளிக் கிளிக் செய்த பிறகு, யுபிஐ (UPI) அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தை காண்பீர்கள். அதில் ஒன்றை தேர்வு செய்து பணம் செலுத்தவும். அவவ்ளவு தான் வேலை முடிந்தது!


Click it and Unblock the Notifications








