Home
News

பத்த வச்சிட்டியே பரட்ட! JioCinema எதிரொலி.. Prime Video-வில் புது மாற்றம்!

ரூ.29 மற்றும் ரூ.79-க்கு 2 புதிய ஜியோ சினிமா (Jio Cinema) திட்டங்கள் அறிமுகமானதை தொடர்ந்து, பிஎஸ்என்எல் நிறுவனமானது தனது சினிமா பிளஸ் (BSNL Cinema Plus) சேவையின், 1 மாத கால சந்தா திட்டத்தின் விலையை ரூ.49 ஆக குறைத்துள்ளது.

மேற்கண்ட 2 நடவடிக்கைகளுமே அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix) போன்ற போட்டியாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனாலும் கூட இதை பார்த்து நெட்பிளிக்ஸ் நிறுவனமானது அச்சம் கொள்வது போல் தெரியவில்லை.

JioCinema எதிரொலி.. Prime Video-வில் புது மாற்றம்!

ஏனென்றால் பாஸ்வேர்ட் ஷேரிங்கை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அட்டகாசமான லாபத்தையும், பல எண்ணிக்கையிலான புதிய சந்தாதாரர்களையும் பெற்று வருகிறது. ஆனால் அமேசான் நிறுவனமானது.. மலிவு விலையில் கிடைக்கும் ஜியோசினிமா மற்றும் பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் சேவைகளை பார்த்து சற்றே பயந்துவிட்டது போல் தெரிகிறது.

தனது பிளாட்ஃபார்மை இன்னும் பலப்படுத்திக் கொள்ள மற்றும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள, பிரைம் வீடியோ தளத்தில் எம்ஜிஎம் பிளஸ் (MGM Plus) கன்டென்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பிரைம் வீடியோவானது எம்ஜிஎம் இண்டர்னேஷனல் (MGM International) உடன் கூட்டு சேர்ந்து உள்ளது.

JioCinema எதிரொலி.. Prime Video-வில் புது மாற்றம்!

எம்ஜிஎம் பிளஸ் ஆனது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் பிரபலமான சீரீஸ், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் ஹாலிவுட் ஸ்டுடியோவான எம்ஜிஎம்-ல் இருந்து வரும் கிளாசிக் படங்கள் உட்பட பல வகையான கன்டென்ட்களை உங்களுக்கு வழங்கும். இந்த நுழைவின் மூலம், இந்தியாவில் உள்ள பிரைம் வீடியோ தளத்தில் கிடைக்கும் 23வது சேனலாக எம்ஜிஎம் பிளஸ் உருமாறியுள்ளது.

ஆனால் எம்ஜிஎம் பிளஸ் கன்டென்ட்கள் ஆனது இலவசமாக கிடைக்காது. பிரைம் மெம்பர்கள் எம்ஜிஎம் பிளஸ் சேவைக்கான வருடாந்திர ஆட்-ஆன் சந்தாவை ரூ.599 க்கு வாங்கலாம். அதாவது எம்ஜிஎம் பிளஸ் கன்டென்ட்கள் ஆனது பிரைம் வீடியோ தளத்திற்காக நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு கூடுதலாக செலவு செய்வதன் மூலம் அணுக கிடைக்கும் கட்டண சேவையாகும்.

JioCinema எதிரொலி.. Prime Video-வில் புது மாற்றம்!

ஜியோ சினிமா ரூ.29 மற்றும் ரூ,89-ன் கீழ் என்னென்ன கிடைக்கும்? ரூ.29 திட்டத்தின் கீழ் 4கே கன்டென்ட், ஆட்-ஃப்ரீ வியூவிங், ஆஃப்லைன் வியூவிங் ஆப்ஷன்ஸ் பிரத்யேக சீரீஸ், திரைப்படங்கள், ஹாலிவுட், கிட்ஸ் மற்றும் டிவி கன்டென்ட்கள் உள்ளிட நன்மைகள் 1 மாத காலத்திற்கு கிடைக்கும்.

இந்த திட்டத்தில் உள்ள ஆட்-ஃப்ரீ அம்சமானது ஸ்போர்ட்ஸ் மற்றும் லைவ் சேனல்களுக்கு கிடைக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது தவிர ரூ.29 திட்டத்தின் கீழ் ஒரு நேரத்தில் ஒரே ஒரு டிவைஸின் கீழ் மட்டுமே கன்டென்ட்களை பார்க்க முடியும். இருப்பினும் இந்த திட்டம் மொபைல் ஆப், வெப் மற்றும் டிவி உட்பட அனைத்து டிவைஸ்களிலும் கன்டென்டை பார்க்க அனுமதிக்கும்.

JioCinema எதிரொலி.. Prime Video-வில் புது மாற்றம்!

மறுகையில் உள்ள ரூ.89 திட்டமானது 99 சதவிகிதம் ரூ.29-ன் கீழ் கிடைக்கும் அதே நன்மைகளை தான் வழங்குகிறது. அதாவது இது 4கே கன்டென்ட், ஆட்-ஃப்ரீ வியூவிங், ஆஃப்லைன் வியூவிங் ஆப்ஷன்ஸ் பிரத்யேக சீரீஸ், திரைப்படங்கள், ஹாலிவுட், கிட்ஸ் மற்றும் டிவி கன்டென்ட்கள் உள்ளிட நன்மைகள் 1 மாத காலத்திற்கு வழங்கும்.

மேலும் ரூ.29-ஐ போலவே இந்த திட்டத்திலும் கூட ஆட்-ஃப்ரீ அம்சமானது ஸ்போர்ட்ஸ் மற்றும் லைவ் சேனல்களுக்கு கிடைக்காது. பிறகு ரூ.29-க்கும் ரூ.89-க்கும் என்னதான் வித்தியாசம் என்று கேட்டால்.. ரூ.89-ன் கீழ் ஒரு நேரத்தில் 4 டிவைஸ்களின் கீழ் கன்டென்ட்களை பார்க்க முடியும்.

JioCinema எதிரொலி.. Prime Video-வில் புது மாற்றம்!

ரூ.49-க்கு கிடைக்கும் பிஎஸ்என்எல் சினிமாபிளஸ் ஸ்டார்டர் பேக்கின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இதன் கீழ் லயன்ஸ்கேட் (Lionsgate), ஷீமாரோ மீ ( ShemarooMe), ஹங்காமா (Hungama) மற்றும் எபிக் ஆன் (Epic On) உள்ளிட்ட பல ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். முன்னதாக இதே திட்டம் ரூ.99 க்கு கிடைத்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioCinema Effect Amazon Added MGM Plus Add On Subscription on Prime Video For Rs 599 Per Year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X