CSK மேட்ச்னா சும்மாவா? உலக சாதனையே படைச்சுட்டாங்க! என்ன மேட்டர் தெரியுமா?
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் என்று எந்த பக்கம் திரும்பினாலும் மஞ்சள் நிறத்தில் CSK அணியின் வெற்றி மற்றும் தலை தோனியின் வீடியோ என்று இணையமே மஞ்சள் காடாக நிறைந்துள்ளது. விறுவிறுப்பாகவும், பதட்டமாகவும் நடைபெற்ற இறுதி போட்டியில் CSK அணி வெற்றிபெற்றுள்ளது.
மிகவும் ஆரவாரத்துடன் துவங்கி அடிமனதில் ஒரு பக்கம் வெற்றியின் மகிழ்ச்சியுடனும், மறுபக்கம் கண்களில் ஆனந்த கண்ணீருடன் இந்த போட்டி நிறைவடைந்தது. ஒரு பக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ட்ரோபியை வென்ற கொண்டாட்டத்தில் இருக்க, மறுபுறம் ஜியோ நிறுவனம் உலக சாதனை படைத்த கொண்டாட்டத்தில் குதூகலமாக இருந்துள்ளது. காரணம், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான பார்வையாளர்களை நிறுவனம் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோசினிமா (JioCinema) மூலம், குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) டாடா ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது, 32 மில்லியன் அல்லது 3.2 கோடி பார்வையாளர்களை ஒரே நேரத்தில் குவித்து, ஜியோ சினிமா உலக சாதனையைப் படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 3.2 கோடி பார்வையாளர்களை கொண்டு உலக சாதனை படைத்த ஜியோ நிறுவனம் இந்த சாதனை பற்றி கூறிய போது, உண்மையில் நிறுவனம் இதை விட அதிக எண்ணிக்கை எதிர்பார்த்ததாக கூறியுள்ளது. ஆனால், மழை காரணமாக போட்டி தாமதமானது, எனவே பல பார்வையாளர்கள் இரண்டாவது இன்னிங்ஸை பார்க்காமல் சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளது.
இருப்பினும், நள்ளிரவு 1 மணிக்குப் பிறகும் ஒரே நேரத்தில் 2 கோடி பார்வையாளர்கள் ஜியோசினிமாவை அணுகி மேட்ச்சை தொடர்ந்து ரசித்துள்ளனர். இதன் மூலம், ஐசிசி 2019 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதியின் போது நிறுவப்பட்ட முந்தைய உலக சாதனையை நிறுவனம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மே 23 ஆம் தேதி GT vs CSK குவாலிஃபையர் போட்டியின் போது 2.5 கோடி பார்வைகள் லையில் இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஜியோசினிமா இந்த சீசனில் நான்காவது முறையாக அதன் சொந்த சாதனையை முறியடித்துள்ளது. TATA IPL 2023 இன் முதல் ஐந்து வாரங்களில் 1300 கோடிக்கும் அதிகமான வீடியோ பார்வைகளைப் பெற்றதாக JioCinema சமீபத்தில் அறிவித்தது. ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளர் செலவழித்த சராசரி நேரம் 60 நிமிடங்களைத் தொட்டது. டிவியில் TATA IPL 2023 போட்டியை ரசித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
TATA IPL 2023 இன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்காக JioCinema 26 சிறந்த பிராண்டுகளைக் கொண்டுள்ளது. Viacom18 2023-27 முதல் டாடா ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளைக் கொண்டுள்ளது. ஜியோ-சினிமா ஏற்கனவே டிஜிட்டல் அதன் நேரடி பலனைப் பார்க்கிறது என்று கூறியது, மேலும் இது ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது. இது டிஜிட்டல் தளத்தில் ஐபிஎல் பார்வையாளர்களை உயர்த்தியுள்ளது.
இருப்பினும், நிறுவனம் இனி வரவிருக்கும் ஐபிஎல் 2024 போட்டிக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இது ஜியோசினிமா பிரீமியத்திற்கான பல ஒப்பந்தங்களை நிறுவனம் மெல்ல நகர்த்திவருவதாக தெரிகிறது. எது எப்படியாக இருந்தாலும் கப்பு சென்னை சூப்பர் கிங்ஸ்-ற்கு கிடைத்ததில் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications








