Home
News

திடீர்னு இப்படி சொன்னா எப்படி? JioCinema ஆப்பை இலவசமாக பயன்படுத்திய பயனர்கள் புலம்பல்.. ஏன், என்ன ஆச்சு?

ஐபிஎல் 2023 (IPL 2023) கிரிக்கெட் போட்டிகளின் லைவ் ஸ்ட்ரீமிங்கை (Free Live Streaming) இலவசமாக பார்ப்பதற்காக ஜியோசினிமா (JioCinema) ஆப்பை பயன்படுத்திவிட்டு, ஐபில் போட்டிகள் முடிந்த வேகத்தில் அதை அன்இன்ஸ்டால் (Uninstall) செய்த பலரில் நீங்களும் ஒருவரென்றால், ஜியோவின் "இந்த" அறிவிப்பு உங்களை நிச்சயம் கடுப்பாக்கும்!

நீங்கள் ஒரு உண்மையான கிரிக்கெட் பிரியராக இருந்தால், ஜியோசினிமா ஆப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். ஏனென்றால், கடந்த ஒருசில மாதங்களில் ஒரு முக்கிய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமாக உருமாறியுள்ள ஜியோசினிமா ஆப் ஆனது ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

JioCinema ஆப்பை இலவசமாக பயன்படுத்திய பயனர்கள் புலம்பல்.. ஏன்?

அதென்ன அறிவிப்பு? இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20ஐ போட்டிகள் என சுமார் ஒரு மாத காலத்திற்கு நடக்கவுள்ள இந்தியா VS மேற்கிந்திய தீவுகளுக்கு (India VS West Indies) இடையேயான கிரிக்கெட் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான டிஜிட்டல் உரிமையை ஜியோசினிமா பெற்றுள்ளது.

டெஸ்ட் போட்டியுடன் தொடங்கும் இந்த கிரிக்கெட் தொடர் ஆனது வருகிற ஜூலை 12 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியானது டொமினிகாவில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிரினிடாட்டில் இரண்டாவது டெஸ்ட் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆனது இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 2025 ​​சுழற்சியின் தொடக்கமாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ஜூலை 27 ஆம் தேதியன்று மொத்தம் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகும். கடைசியாக, ஐந்து போட்டிகளை கொண்ட டி20ஐ தொடர் ஆனது ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும். முன்னரே குறிப்பிட்டபடி, மேற்கண்ட அனைத்து போட்டிகளுமே ஜியோசினிமா ஆப் வழியாக இலவசமாக லைவ் ஸ்ட்ரீம் செய்ய கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஐபில் 2023 போட்டிகளை போலவே இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் தொடரும் தமிழ், ஹிந்தி, போஜ்புரி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஏழு மொழிகளில் அணுக கிடைக்கும். அதாவது பல்வேறு மொழிகளை வழங்கும் முதல் இருதரப்பு கிரிக்கெட் தொடர் என்கிற பெருமையும் ஜியோசினிமா பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioCinema App To Live Stream All Test ODI T20 Matches of India vs West Indies 2023 For Free
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X