மீடியாடெக் பிராசஸர் உடன் வெளிவரும் ஜியோபுக் லேப்டாப்.!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து விரைவில் பட்ஜெட் விலையில் புதிய ஜியோபுக் எனும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபுக் லேப்டாப்

ஜியோபுக் லேப்டாப்

குறிப்பாக இந்த ஜியோபுக் மாடல் ஆனது எண்ட்ரி-லெவல் அம்சங்களை கொண்டிருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் சமீபத்தில் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதன்படி இந்த புதிய ஜியோபுக் லேப்டாப் ஆனது என்.பி.112எம்.எம். எனும் குறியீட்டு பெயர் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

 மீடியாடெக் எம்.டி.8788

அதேபோல் இந்த புதிய ஜியோபுக் லேப்டாப் மாடல் மீடியாடெக் எம்.டி.8788 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரூ. 299 விலை முதல் 100 ஜிபி டேட்டா வரை கிடைக்கும் Airtel மை வைஃபை திட்டங்கள்.. இது வேற லெவல் ப்ரோ..ரூ. 299 விலை முதல் 100 ஜிபி டேட்டா வரை கிடைக்கும் Airtel மை வைஃபை திட்டங்கள்.. இது வேற லெவல் ப்ரோ..

 ஜியோபுக் லேப்டாப் மாடலில் ஹெச்.டி

மேலும் இந்த ஜியோபுக் லேப்டாப் மாடலில் ஹெச்.டி. ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஜியோபுக் லேப்டாப் மாடல் வெளிவரும்.

48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

குறிப்பாக மினி எச்.டி

குறிப்பாக மினி எச்.டி.எம்.ஐ போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், குவால்காம் ஆடியோ சிப், JioStore, JioMeet, JioPagesஆப்ஸ் மைக்ரோசாப்ட் டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் மைக்ரோசாப்ஃப்ட் ஆபிஸ் போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஜியோபுக் லேப்டாப் மாடல்.

 லேப்டாப் மாடலில் ஆண்ட்ராய்டு

இந்த ஜியோபுக் லேப்டாப் மாடலில் ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோ ஓ.எஸ், 4ஜி எல்.டி.இ. போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட்

புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது. பின்பு 720×1440 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடியது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

50எம்பி ரியர் கேமரா மற்றும் தரமான டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!50எம்பி ரியர் கேமரா மற்றும் தரமான டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில்

குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் 13 எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம். ஆனால் இந்த சாதனம் கைரேகை சென்சாருடன் வரவில்லை, அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் பேட்டர்ன் மற்றும் பின் அடிப்படையிலான அங்கீகாரத்தை நம்பியிருக்க வேண்டும்.

ஸ்னாப்டிராகன் 215 மூலம்

அதேபோல் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 மூலம் இயக்கப்படுகிறது. பின்பு 4ஜி, டூயல் சிம்கள், ப்ளூடூத் 4.1, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஜியோபோன் நெக்ஸ்ட்.

வெடித்து சிதறிய OnePlus Nord 2 5G.. பலத்த தீக்காயத்துடன் பயனர் சிகிச்சை.. OnePlus வெடிக்க என்ன காரணம்?வெடித்து சிதறிய OnePlus Nord 2 5G.. பலத்த தீக்காயத்துடன் பயனர் சிகிச்சை.. OnePlus வெடிக்க என்ன காரணம்?

நெக்ஸ்ட் மாடலில் 3500

மேலும் ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் 3500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் கூகுள் உடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட PragatiOS வசதி உள்ளது. கிட்டத்தட்ட பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது ஜியோபோன் நெக்ஸ்ட். குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,499-ஆக உள்ளது.

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி,

மேலும் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, கடந்த செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனம் கிட்டதட்ட 1.9 கோடி வையர்லெஸ்வாடிக்கையாளர்களை இழந்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 423.83 மில்லியானகக் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதேசமயம் ஏர்டெல் நிறுவனம் 2.7 லட்சம் புதிய வையர்லெஸ்வாடிக்கையாளர்களைத் தனது நெட்வொர்க் கீழ் இணைத்துள்ளது. எனவே இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 354.46 மில்லியன் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பென்டிரைவில் வெப்சீரிஸ் ஏற்றி விற்றவருக்கு மரண தண்டனை., வாங்கியவருக்கு ஆயுள் தண்டனை: வடகொரியா உத்தரவு!பென்டிரைவில் வெப்சீரிஸ் ஏற்றி விற்றவருக்கு மரண தண்டனை., வாங்கியவருக்கு ஆயுள் தண்டனை: வடகொரியா உத்தரவு!

வோடபோன் ஐடியா நிறுவனம் 10.7

அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் 10.7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 269.99 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே 20.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் வெளியேறி நாட்டின் மொத்த டெலிகாம்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.6 பில்லியன் ஆக உள்ளது என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jiobook laptop that comes with MediaTek processor: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X