ரூ.12,000 தாங்க போதும்.. எல்லோருக்கும் Laptop தரும் Ambani.. JioBook மீது தீபாவளி சலுகை.. உடனே அள்ளிக்கோங்க..
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே, இந்திய வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி ட்ரீட் (Diwali Treat), தீபாவளி கிப்ட் (Diwali Gift), தீபாவளி சலுகை (Diwali Offers) மற்றும் தீபாவளி தள்ளுபடி (Diwali Discount) என்ற பெயரில் அம்பானி பல சலுகைகளை வாரி வழங்க துவங்கிவிடுவார். அந்த வரிசையில், அம்பானி தனது ஜியோ (Jio) நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோபுக் லேப்டாப் (JioBook Laptop) சாதனத்தை இப்போது யாரும் எதிர்பார்த்திடாத மலிவு விலைக்கு வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜியோபுக் லேப்டாப் சாதனத்தின் விலை முன்பை விட, இப்போது பல மடங்கு குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) கீழ் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ (Jio) நிறுவனத்தால், கடந்த 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மலிவு விலை லேப்டாப் மாடலான ஜியோபுக் (JioBook) சாதனத்தின் மீது பெரியளவு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோபுக் லேப்டாப் சாதனம் இந்தியா சந்தையில் வெறும் ரூ. 16,499 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சலுகை விலையில் ஜியோபுக் லேப்டாப் (JioBook Laptop):
ஆனால், தற்போது தீபாவளி கொண்டாட்டங்கள் கலைக்கட்டத் துவங்கியுள்ளதால் அம்பானிக்கு சொந்தமான நிறுவனம் இந்த புதிய ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை வெறும் ரூ. 12,890 என்ற விலைக்கு விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இந்த JioBook லேப்டாப் சாதனத்தை வாடிக்கையாளர்கள் இப்போது நேரடியாக Amazon.in அல்லது Reliance Digital தளங்கள் மூலம் ஆன்லைன் ஆர்டர் செய்து வாங்கலாம்.
ஜியோபுக் லேப்டாப் சிறப்பம்சம் (JioBook Laptop Specifications):
ஜியோ இந்த லேப்டாப்பை மீடியாடெக் 8788 மற்றும் JioOS இல் இயங்குகிறது. இதுவொரு ஆண்ட்ராய்டு 4ஜி லேப்டாப் ஆகும். நீங்கள் அதை 4G மொபைல் நெட்வொர்க்குடன் அல்லது நேரடியாக உங்கள் பகுதியில் உள்ள Wi-Fi நெட்வொர்க்குடன் இணைத்து பயன்படுத்தலாம். JioBook லேப்டாப் 11.6" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இது வெறும் 990 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு நீல நிற மாறுபாட்டில் மட்டுமே வாங்க கிடைக்கிறது.
இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பின் சராசரி பேட்டரி ஆயுள் 8 மணிநேரம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இது வாங்கிய நாளிலிருந்து 12 மாத உத்தரவாதத்துடன் வருகிறது. இது இன்பினிட்டி கீபோர்ட் மற்றும் ஸ்மூத் டச் பேட் ஆதரவை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் தொழில் வல்லுநர்களை இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
அப்படியானால், இது யாருக்கு பொருத்தமானது என்றால், JioBook லேப்டாப் வேர்ட் ஆவணங்களில் வேலை செய்ய அல்லது அடிப்படை ப்ரெசென்ட்டேஷன்களை உருவாக்க ஏற்றது. குறிப்பாக இது படிக்கும் மாணவர்கள் மற்றும் அடிப்படை கம்ப்யூட்டிங் ஆற்றல் தேவைப்படும் பயனர்களுக்கு மிகவும் பொருத்தமானது. மலிவு விலையில் ஒரு டீசெண்டான லேப்டாப் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த JioBook லேப்டாப் சாதனம் ஒரு சிறந்த தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








