Home
News

அசூர ஆர்டர்.. வெறும் ரூ.13,749 போதும்.. ஜியோ லேப்டாப்.. LTE சப்போர்ட்.. 256GB மெமரி.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் லிமிடெட் பீரியட் ஆஃபராக ஜியோபுக் 11 (JioBook 11) லேப்டாப் வெறும் ரூ.13,749 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆஃபரை எப்படி பெறுவது? லேப்டாப்பின் முழு அம்சங்கள் என்ன? உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.

ஜியோபுக் 11 அம்சங்கள் (JioBook 11 Specifications): இந்த ஜியோபுக் லேப்டாப் 11.6 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆன்டி கிளார் எச்டி டிஸ்பிளே (Anti Glare HD Display) மாடலாகும். அதோடு எல்இடி பேக்லைட் (LED Backlight) சப்போர்ட் வருகிறது.

வெறும் ரூ.13,749 போதும்.. ஜியோ லேப்டாப்.. LTE சப்போர்ட்.. எந்த மாடல்?

இந்த லேப்டாப்பில் ஜியோ ஓஎஸ் (JioOS) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 64 பிட் (64 bit) சப்போர்ட் கொண்ட ஆக்ட-கோர் மீடியாடெக் எம்டி 8788 (Octa Core Mediatek MT 8788) சிப்செட் வருகிறது. பேஸிக் மாடல் லேப்டாப்களில் வரும் ஆர்ம் மாலி ஜி72 (ARM Mali G72 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஜியோபுக் லேப்டாப்பில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 256 ஜிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் சப்போர்ட் வருகிறது.

வீடியோ காலிங் சப்போர்ட்டுக்காக எல்இடி இன்டிகேட்டருடன் கூடிய 2 எம்பி எச்டி வெப்கேம் (HD Webcam) கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீரியோ சவுண்ட் சப்போர்ட் (Stereo Sound Support) வருகிறது. இந்த லேப்டாப்பில் டூயல் பேண்ட் வைபை 802 (Dual Band Wi-Fi 802), 4ஜி சிம் எல்டிஇ (4G SIM LTE) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த ஜியோபுக் லேப்டாப்பில் 2 யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) வருகிறது. டூயல் எம்இஎம்எஸ் டிஜிட்டல் மைக் (Dual MEMS Digital Mic) கொடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் பிரிண்டிங் (Wireless Printing) சப்போர்ட் வருகிறது.

இந்த லேப்டாப் ஜியேபியன் (JioBIAN) லினக்ஸ் பேஸ்ட் கோடிங் சாப்ட்வேர் (Linux Based Coding Software) பயன்படுத்தப்பட்டுள்ளது. குயிக்ஹீல் பேரெண்டல் கன்ட்ரோல் (QuickHeal Parental Control) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கன்ட்ரோல்களுக்கு ஏதுவாக, இன்பினிட்டி கீபோர்ட் மற்றும் லார்ஜ் டிராக்பேட் (Infinity Keyboard and Large Trackpad) கொண்டிருக்கிறது.

பில்ட்-இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (‎Built-in Stereo Speakers) வருகின்றன. இந்த ஜியோபுக் லேப்டாப்பில் 4000mAh லித்தியம்-அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொடர்ந்து 8 மணி நேரம் பேக்கப் கொடுக்கக்கூடியது. இந்த ஜியோபுக் லேப்டாப் பேட்டரியோடு சேர்த்து வெறும் 990 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

ஜியோ ப்ளூ (Jio Blue) என்னும் ஒரேவொரு கலரில் விற்பனை செய்யப்படு வருகிறது. இந்த லேப்டாப்புக்கு ஒரு வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. அதோடு லேப்டாப் சார்ஜருக்கு 6 மாத வாரண்டி கிடைக்கிறது. இந்த ஜியோபுக் லேப்டாப்பின் விலை ரூ.16,499ஆக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், அறிமுக சலுகையாக வெறும் ரூ.14,499க்கு விற்பனைக்கு வந்து மிகப்பெறும் வரவேற்பு பெற்றது.

இப்போது, இந்த விலையிலும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை (Amazon Great Indian Festival Sale) முன்னிட்டு அசத்தலான லிமிடெட் பீரியர் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பை எஸ்பிஐ டெபிட் கார்டு (SBI Debit Card) பயன்படுத்தி வாங்கினால், ரூ.750 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆகவே, இந்த ஜியோபுக் 11 லேப்டாப்பை வெறும் ரூ.13,749க்கு வாங்கிக் கொள்ள முடியும். மிகவும் கம்மியான பட்ஜெட்டில் பேஸிக் அம்சங்கள் கொண்ட லேப்டாப் வேண்டுமானால், இந்த ஜியோபுக் லேப்டாப் நல்ல தேர்வாக இருக்கும். அதேபோல மாணவர்கள், வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்களுக்கு ஏற்ற விலையிலும் இந்த லேப்டாப் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioBook 11 Sale With Limited Period Offer On Amazon, JioMart Check Specifications Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X