ஒன்ஸ் மோர் கேட்டீங்களே.. இந்தாங்க JioBharat V2 4G அள்ளிட்டு போங்க.. அம்பானி கொடுத்த 65% ஆஃபர்.. ரூ.699 போதும்!
இந்திய மக்களுக்கு மிகவும் மலிவு விலையில் 4ஜி நெட்வொர்க் (4G network) அனுபவத்தை வழங்க வேண்டுமென்ற எண்ணத்தில் முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ (Jio) நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஜியோ பாரத் வி2 4ஜி (JioBharat V2 4G) என்ற பியூச்சர் போன் மொபைல் (Jio feature phone mobile) மாடலை அறிமுகம் செய்தது. சந்தையில் விற்பனை செய்யப்படும் வழக்கமான ஒரு அடிப்படை போன் போல இல்லாமல், இந்த JioBharat V2 4G போனில் UPI பேமெண்ட் வசதி, லைவ் கிரிக்கெட் மேட்ச், கேமராவென்று பல அம்சங்களை வழங்கியுள்ளது.
ஆம், சரியாக தான் படித்தீர்கள், இது பார்ப்பதற்கு பழைய நோக்கியா பியூச்சர் போன் (Nokia feature phone) போல இருந்தாலும், இது இந்த காலத்திற்கு ஏற்ப பல விஷயங்களை செய்யக்கூடிய ஒரு உண்மையான பியூச்சர்ஸ்டிக் மொபைல் சாதனமாக வெளிவந்துள்ளது. அதுவும் மிக-மிக குறைந்த விலையில், எல்லா வகையான மக்களும் பயன்படுத்தும் வகையில் இந்த JioBharat V2 4G போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மீண்டும் ரூ. 699 விலைக்கு விற்பனைக்கு வந்த JioBharat V2 4G போன்.. அள்ளிட்டு போங்க:
இதற்கு முன்பு பல முறை இந்தியாவில் இந்த JioBharat V2 4G போனின் விற்பனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும், JioBharat V2 4G போனின் எல்லா யூனிட்களும் விற்று தீர்ந்துவிடும். கடந்த விற்பனைக்கு பிறகு, ஜியோ நிறுவனம் இப்போது மீண்டும் ஒரு முறை புதிய JioBharat V2 4G போன்களின் ஸ்டாக்கை நிரப்பியுள்ளது. மலிவு விலையில் யாரும் தவறவிடக்கூடாத ஒரு சிறப்பு சலுகையுடன் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஜியோ ஸ்ட்ரோஸ் (Jio Stores) வழியாகவும், மற்ற சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் இந்த போன் மீண்டும் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 1,999 என்றாலும், தற்போது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள 65% விலை தள்ளுபடிக்கு பிறகு, JioBharat V2 4G போனின் விலை ரூ. 699 என்ற அடிமட்ட ரேட்டிற்கு வாங்க கிடைக்கிறது.
இந்த JioBharat V2 4G போனின் அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த சாதனம் 1.77" இன்ச் அளவு கொண்ட QVGA இன்பில்ட் டிஸ்பிளேவுடன் (display) வருகிறது. இது 240 x 320 பிக்சல் தரத்தை கொண்டுள்ளது. இந்த JioBharat V2 4G பியூச்சர் போன் (JioBharat V2 4G Feature Mobile Phone) 0.3 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமரா (camera) அம்சத்தையும் கொண்டுள்ளது.
இது வழக்கமான பியூச்சர் போன் இல்லை.. UPI இருக்கு.. வீடியோ இருக்கு.. இன்னும் நிறைய இருக்கு:
இதில் 512MB ரேம் (RAM) மற்றும் 4GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் (Storage) கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, விருப்பமுள்ளவர்கள் 128GB ஸ்டோரேஜ் வரை விரிவுபடுத்திக்கொள்ளலாம். இந்த போன் 1000mAh பேட்டரியை (Battery) பேக் செய்கிறது. இது 4G ஆதரவுடன், இந்த காலத்திற்கு ஏற்றார் போல, டிஜிட்டல் கட்டண முறையான UPI கட்டண முறையை ஆதரிக்கும் ஜியோபே (Jio Pay) அம்சத்தையும் கொண்டுள்ளது. இது மற்ற எந்த பியூச்சர் போன்களிலும் காணப்படாத ஒரு அம்சமாகும்.
இந்த போனில் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ சினிமா (Jio cinema) சேவைகள் பயன்படுத்த கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்த JioBharat V2 4G போனை பயன்படுத்தி உங்களால் குறிப்பிட்ட கேபிள் டிவி சேனல்கள் மற்றும் கிரிக்கெட் மேட்ச் லைவ் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனின் அடிப்படை ரீசார்ஜ் திட்டம் வெறும் ரூ.123 முதல் துவங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








