Home
News

பெரிய கும்பிடு.. ரூ.799-க்கு ஒரு போன்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. மாதம் ரூ.103 போதும்.. மட்ட ரேட்டுக்கு வருது!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ஜியோபாரத் சேப்டி பர்ஸ்ட் போனை (JioBharat Safety First Phone) களமிறக்கி இருக்கிறது. ரூ.799 விலைக்கு கிடைக்கும் இந்த ஜியோபாரத் போனுக்கு அடிமட்ட விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கின்றன. மாதத்துக்கு ரூ.102 செலவில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களும் கிடைக்கின்றன.

ஜியோபார்த் போன்களுக்கு 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே கிடைக்கின்றன. ரூ.123 விலைக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ஆரம்ப விலை திட்டம் கிடைக்கிறது. அதேபோல ரூ.234 விலைக்கு 56 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.1234 விலைக்கு 336 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கிறது. இதில் ரூ.1234 விலை கொண்ட திட்டத்துக்கு மாத செலவு வெறும் ரூ.103ஆக மட்டுமே இருக்கிறது.

பெரிய கும்பிடு.. ரூ.799-க்கு ஒரு போன்.. 336 நாட்கள் வேலிடிட்டி வருது!

அதாவது, இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, 1 மாதத்துக்கு தேவைப்படும் செலவை கணக்கிட்டால், ரூ.103 மட்டுமே தேவைப்படுகிறது. இவ்வளவு மலிவான விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் பார்ப்போம்.

ஜியோபாரத் ரூ.123 திட்ட விவரங்கள் (JioBharat Rs 123 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) கால்கள் சலுகை கிடைக்கும். மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

டேட்டாவை பார்க்கையில், நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த 500 எம்பி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஜியோ சாவன் (JioSaavn) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆப்களும் கிடைக்கும். இதற்கு அடுத்து 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் கிடைக்கிறது. சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

ஜியோபாரத் ரூ.234 திட்ட விவரங்கள் (JioBharat Rs 234 Plan Details): இதில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். ஆனால், எஸ்எம்எஸ் சலுகைகள் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 வீதம் கொடுக்கப்படும். ஜியோ சாவன், ஜியோ டிவி கிடைக்கிறது.

ஜியோபாரத் ரூ.1234 திட்ட விவரங்கள் (JioBharat Rs 1234 Plan Details): இந்த திட்டத்துக்கு அதிகபட்சமாக 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் ஒதுக்கப்படும். மற்ற சலுகைகள் முந்தைய திட்டங்களில் கிடைத்ததை போலவே கொடுக்கப்படும். ஆகவே, 336 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

அதேபோல தினசரிக்கு 0.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கும் ஜியோ சாவன் மற்றும் ஜியோ டிவி ஆகிய ஆப்களின் சலுகை கிடைக்கிறது. ஒட்டுமொத்த ஜியோபாரத் போன்களுக்கும் இந்த மூன்று திட்டங்கள் மட்டுமே ஆப்ஷனில் கொடுக்கப்படுகின்றன.

ரூ.799 விலைக்கு ஏற்கனவே ஜியோபாரத் போன் கிடைக்கிறது. இதில் வி4 சீரிஸ் (V4 Series) மாடல்களில் 4 புதிய பீச்சர்கள் அப்கிரேட் செய்யப்பட்டு, ஜியோபாரத் சேப்டி ஃபர்ஸ்ட் மாடல்களாக கிடைக்கின்றன. அதாவது, லோகேஷன் மானிட்டரிங், யூசேஜ் மேனேஜர், போன் & சர்வீஸ் ஹெல்த் மற்றும் ஆல்வேஸ் அவைலபிள் பேட்டரி அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioBharat Safety First Phones Available At Rs 799 Prepaid Recharge Plans Starting At Rs 123
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X