Home
News

2026 ஆரம்பமே Jio ஒரே போடு.. மாதம் ரூ.102 க்கு 12 மாதங்கள் வேலிடிட்டி.. 168 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ நிறுவனத்தின் ஜியோபாரத் போன் திட்டங்கள் டெலிகாம் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு கிடைப்பதால் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் மாதத்துக்கு ரூ.102 செலவில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் 2026 ஆம் ஆண்டு ஆரம்பமே அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. விலையில் மாற்றம் செய்யப்படாததால், தொடர்ந்து மலிவான விலைக்கு கிடைக்க உள்ளது.

2025 ஆம் ஆண்டில் கிடைத்த விலையிலேயே 2026 ஆம் ஆண்டிலும் ஜியோபாரத் போன் திட்டங்கள் கிடைக்கிறது. இதில் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. போஸ்ட் டேட்டா மற்றும் ஜியோ ஆப்களின் சலுகையும் இந்த ஜியோபாரத் போன் திட்டத்தில் கிடைக்கும்.

2026 ஆரம்பமே Jio ஒரே போடு.. மாதம் ரூ.102 க்கு 12 மாதங்கள் வேலிடிட்டி!

ஜியோபாரத் போன் ரூ 1234 திட்ட விவரங்கள் (JioBharat Phone Rs 1234 Plan Details): 12 மாதங்கள் வேலிடிட்டி இந்த திட்டத்துக்கு கிடைக்கும். 28 நாட்கள் வீதம் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மாதத்துக்கு ரூ.102 செலவில் திட்டத்தை பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் அன்லிமிடெல் கால்கள் (லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ்) கொடுக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டாவை கொண்டுள்ளது. ஆகவே, 336 நாட்களுக்கு 168 ஜிபி டேட்டாவை பெறலாம். மேலும், 0.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். எஸ்எம்எஎஸ் சலுகை ஆனது 28 நாட்களுக்கு 300 ஆக கொடுக்கப்படும். ஆகவே, 12 மாதங்களுக்கு தலா 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும்.

ஜியோசாவன் மற்றும் ஜியோடிவி ஆப்களும் இதில் கிடைக்கிறது. இந்த 336 நாட்கள் வேலிடிட்டி திட்டம் போக 84 நாட்கள் வேலிடிட்டி, 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோபாரத் போன் திட்டங்களும் கஸ்டமர்களுக்கு கிடைக்கின்றன. இந்த திட்டங்களும் 2025 ஆம் ஆண்டில் கிடைத்த விலையிலேயே தொடர்ந்து கிடைக்கின்றன.

ஜியோபாரத் போன் ரூ. 369 திட்ட விவரங்கள் (JioBharat Phone Rs 369 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படும். இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா வீதம் 42 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் வீதம் மூன்று முறை கொடுக்கப்படும்.

ஜியோபாரத் போன் ரூ 234 திட்ட விவரங்கள் (JioBharat Phone Rs 234 Plan Details): 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த ஜியோபாரத் போன் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் 28 ஜிபி மொத்த டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை (Unlimited Local, STD, Roaming Voice Calls) கொடுக்கும். ஜியோடிவி மற்றும் ஜியோசாவன் ஆப்கள் கிடைக்கும்.

ஜியோபாரத் போன் ரூ 123 திட்ட விவரங்கள் (JioBharat Phone Rs 123 Plan Details): 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ஜியோபாரத் போன் திட்டம் ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. இதிலும் 0.5 ஜிபி டேட்டா தினமும் கிடைக்கும். 14 ஜிபி மொத்த டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சாவன் ஆப்கள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioBharat Phone Rs 1234 Plan 12 Months Validity Local STD Roaming Call Rs 102 Cost Per Month in 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X