Home
News

என்ன மனுஷன்யா.. வெறும் ரூ.999 விலைக்கு புது போன் தரான்.. அசத்தும் அம்பானி.. இந்த போன்ல என்ன இருக்கு?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோபாரத் போன் வரிசையில் புதிய சேர்ப்பாக சமீபத்தில் சேர்த்த மாடல் தான் ஜியோபாரத் K1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) மாடலாகும். 4ஜி நெட்வொர்க்கிற்கு மக்களை மாற்ற உதவும் நோக்கத்துடன் வெளிவந்த சாதனமாகும்.

மக்களை மலிவு விலையில் 4ஜி நோக்கி நகர்த்தும் தொழில்நுப்ட மேம்பாடு நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட பியூச்சர் போன் மாடல் இதுவாகும். இது அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில், இந்திய சந்தையில் ரூ. 1,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த போன் மீது அதிரடியாக 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, யாரும் எதிர்பார்த்திடாத ரூ.999 என்ற மலிவு விலையில் தற்போது வாங்க கிடைத்துள்ளது.

என்ன மனுஷன்யா.. வெறும் ரூ.999 விலைக்கு புது போன் தரான்..

ஜியோபாரத் K1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G):

இது ஒரு அடிப்படை 4ஜி மொபைல் சாதனமாகும். இது சாமானியர்களை மொத்தமாக 4ஜி தளத்திற்கு மாற்ற அனுமதிக்கிறது. ஜியோபாரத் K1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) ஆனது, மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது போல், பிஸிக்கல் கீபேட்டுடன் வருகிறது. இது ஜியோலாக் செய்யப்பட்ட ஒரு சிம் அல்லாத ஸ்லாட்டுடன் வருகிறது. அதாவது, இந்த மொபைலில் நீங்கள் ஜியோ (Jio) சிம்மை மட்டுமே பயன்படுத்த முடியும்.

டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் (Display and Storage): இதன் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், இது 1.77" இன்ச் அளவு கொண்ட TFT டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 128GB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இன்பில்ட் ஆக இது 4ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 512GB ரேம் உடன் சிறப்பாக செயல்படுகிறது. இதன் பேட்டரி 1000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது.

இந்தச் சாதனம் ஆதரிக்கக்கூடிய 4G பேண்டுகள் உடன் வருகிறது. இது பேண்ட் 3, 5 மற்றும் 40 அலைவரிசையில் இயங்குகிறது. இந்த போனின் டிஸ்பிளே 720p பிக்சல் ரெசொலூஷன் யுவன் வருகிறது. இது ஆக்ஸ் கேபிள்கள் அல்லது வயர்டு இயர்போன்களில் பொருத்துவதற்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் வருகிறது.

என்ன மனுஷன்யா.. வெறும் ரூ.999 விலைக்கு புது போன் தரான்..

இந்த சாதனம் 0.3MP சென்சார் கொண்ட ஒற்றை பின்புற கேமரா உடன் வருகிறது. இது 4G அம்சத்தில் இயங்குவதால், ஃபோன் மூலம் தெளிவான குரல் அழைப்பு அனுபவத்தைப் பெறுவீர்கள். JioBharat K1 Karbonn 4G ஆனது ஜியோசினிமா (JioCinema), ஜியோசாவன் (JioSaavn) மற்றும் FM ரேடியோ அம்சத்துடன் வருகிறது. இது ஜியோபே (JioPay) அம்சமும் உள்ளது.

இதனால் நீங்கள் UPI மூலம் தடையின்றி பணம் அனுபவத்துக்கும் பணம் பெறுவதுக்கும் இந்த போனை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு கூடுதல் நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது. இந்த JioBharat ஃபோன் பயனர்கள் இரண்டு திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம்.

முதலாவது திட்டமாக ஜியோ வழங்கும் ரூ.123 திட்டம் திகழ்கிறது. இதுவொரு மலிவு விலை திட்டமாகும். இரண்டாவது திட்டமாக ஜியோ நிறுவனம் ரூ.1234 விலை திட்டத்தை வழங்குகிறது. இரண்டு திட்டங்களும் தினசரி 0.5ஜிபி டேட்டாவுடன் வருகின்றன. ரூ.123 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியையும், ரூ.1234 திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioBharat K1 Karbonn 4G Mobile Gets 50 Percentage Offer Buy Now At Just Rs 999 Only Check Jio Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X