Home
News

அம்பானினா அம்பானி தான்யா.. 1000 ரூபாய்க்கு கூவி-கூவி விற்கப்படும் Jio Phone.. சூப்பர் சலுகை?

இந்தியாவிலுள்ள எல்லா மக்களுக்கும் 4ஜி-சேவை கிடைக்கவேண்டுமென்ற எண்ணத்தில், ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் பல செயல்களை செய்து வருகிறது. அந்த வரிசையில், ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மொபைல் தான் ஜியோபாரத் பி1 சீரிஸ் (JioBharat B1 Series).

ஜியோ தனது ஜியோபாரத் (JioBharat) மொபைல் சீரிஸ் வரிசையின் கீழ் ஜியோபாரத் பி1 (JioBharat B1) என்ற புதிய 4ஜி (4G) மொபைல் (Mobile) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் சாதனம் ஜியோபாரத் வி2 (JioBharat V2) மற்றும் ஜியோபாரத் கே1 கார்பன் (JioBharat K1 Karbonn) போன்ற மாடல்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இதன் மீது சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பானினா அம்பானி தான்யா.. 1000 ரூபாய்க்கு கூவி விற்கப்படும் Jio Phone

ஜியோபாரத் பி1 (JioBharat B1):

ஜியோபாரத் பி1 போன் ஜியோ நிறுவனத்தின் இணையதளத்தில் புதிய சலுகை விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் 4ஜி சேவை கிடைக்க வேண்டும் என்பது ஜியோவின் ஒரு முக்கிய நோக்கமாக வைத்துள்ளது. இதை சாத்தியமாக ஜியோ மலிவு விலையில் பல மொபைல் சாதனங்களை வழங்கி வருகிறது. இதில் புது வரவாக சேர்க்கப்பட்ட மாடல் தான் இந்த ஜியோபாரத் பி1 சீரிஸ் சாதனம்.

இது வழக்கமான ஜியோ போன்களில் காணப்படும் சிறிய டிஸ்பிளேவிற்கு பதிலாக சற்று பெரிய டிஸ்பிளேவுடன் கூடிய அடிப்படை 4G ஃபோனாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஸ்மார்ட்போன் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஸ்மார்ட்போனில் நீங்கள் செய்ய கூடிய பெரும்பாலான விஷயங்களை இந்த ஜியோ போனில் நீங்கள் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜியோ போனில் நீங்கள் வீடியோ பார்க்கலாம், UPI பேமெண்ட்களை மேற்கொள்ளலாம், 8 கோடி பாடல்களை 23 மொழிகளில் கேட்டு மகிழலாம். இதில் FM அம்சம் உள்ளது. இதில் கேமரா அம்சமும் உள்ளது. இந்த போனில் உள்ள Jio Pay மூலம் பணம் அனுப்பவும், பணம் பெறவும் உங்களால் முடியும். இந்த போன் 2.4' இன்ச் டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது.

அம்பானினா அம்பானி தான்யா.. 1000 ரூபாய்க்கு கூவி விற்கப்படும் Jio Phone

JioBharat B1 ஃபோன் சிறப்பம்சம் மற்றும் விலை (JioBharat B1 Specifications and Price):

இந்த சாதனம் 2000 எம்ஏஎச் பேட்டரியைக் (battery) கொண்டுள்ளது. ஜியோவின் இந்த JioBharat B1 ஃபோன் அதன் முந்தைய மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது, அதன் டிஸ்பிளே மற்றும் பேட்டரி திறனில் பெரிய மேம்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. இந்த அடிப்படை மாடல் ஜியோபாரத் பி1 ஃபோனில் கேமரா அம்சம் உள்ளது என்று முன்பே கூறியிருந்தோம். ஆனால், கேமராவின் மெகாபிக்சல்கள் குறித்து எந்த தகவலும் ஜியோ நிறுவனத்தால் வழங்கப்படவில்லை.

ஜியோபாரத் பி1 மொபைல் சாதனம், ஜியோ ஆப்ஸ் (Jio Apps) உடன் முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. ஜியோபாரத் பி1 சாதனத்தில் திரைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் விளையாட்டு சிறப்பம்சங்களை ரசிக்க முடியும் என ஜியோ கூறுவதால், மற்ற மாடல்களைப் போலவே இந்த ஃபோனும் ஜியோ ஆப்ஸுடன் தொகுக்கப்பட்டுள்ளது. ஜியோவின் கூற்றின்படி, ஜியோ பாரத் தொடர் 23 மொழிகளைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளிக்கிறது என்பது இந்த போனின் கூடுதல் சிறப்பம்சமாகும்.

இந்த போன் முற்றிலும் ஜியோ ஒன்றிய சாதனம் என்பதை மறக்காதீர்கள். இதற்கான பொருள், ஜியோ அல்லாத சிம் கார்டுகளை இந்த ஜியோபாரத் போன் பயன்படுத்த அனுமதிக்காது. இந்த சாதனம் இப்போது பிளாக் நிறத்தில் மட்டும் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 2599 ஆகும். ஆனால், ஜியோவின் சமீபத்திய சலுகை மூலம் இந்த போன் மீண்டும் ரூ. 1,299 விலையில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
JioBharat B1 Series Is Now On Offer Price Rs 1299 In Jio Official Site Check Specs Before Buying
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X