இறங்கி அடித்த ஜியோ.. ரூ.1499-க்கு 4ஜி போன்.. 6 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ்.. இதோ முழு விவரம்..
ஜியோ (jio) நிறுவனம் தனது 10 ஆண்டுகால சேவையை முன்னிட்டு ஜியோபாரத் 4ஜி (JioBharat 4G) போனுக்கு சிறப்பு ஆண்டு விழா சலுகைகளை (Anniversary Offer) அறிவித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட கால சலுகையின் மூலம் 2G போன் பயன்படுத்துபவர்கள் 4G சேவைக்கு மாறும் வகையில், தகுதியுள்ள ஜியோபாரத் 4ஜி போனை ரூ.1,499-க்கு வாங்கலாம். இதனுடன் 6 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந்த சலுகையில் ஒவ்வொரு மாதமும் 14GB டேட்டா மற்றும் வரம்பற்ற HD குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 2G போனை வைத்துள்ள பயனர்கள் குறைந்த செலவில் 4G போனை வாங்க இந்த ஆஃபர் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆண்டுவிழா சலுகையின் கீழ் தகுதியான ஜியோபாரத் 4ஜி போன்கள் ரூ.1,499-க்கு கிடைக்கும். இதில் ஆறு மாத இலவச ரீசார்ஜ் பலன்களும் அடங்கும். இருப்பினும், எந்தெந்த ஜியோபாரத் மாடல்கள் இந்தச் சலுகைக்குத் தகுதியானவை என்பதை அந்நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை.
ஜியோபாரத் 4ஜி போன் உடன் ஆறு மாத இலவச ரீசார்ஜ் பலன்கள் கிடைக்கும். அதுவும் ஒவ்வொரு மாதமும் 14ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற எச்டி வாய்ஸ் அழைப்புகள் ஆகியவை அடங்கும். இந்தச் சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
2ஜி போனை வைத்திருக்கும் ஜியோ பயனர்கள் மாதத்திற்கு 199 ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது. எனவே ஆறு மாதங்களுக்கு ரீசார்ஜ்களுக்காக மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 1,200 செலுத்த வேண்டும். ஆனால் ஜியோநிறுவனம் தற்போது ரூ.1499 விலையில் ஆறு மாதங்களுக்கு ரீசார்ஜ் சலுகையை கொடுக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோபாரத் 4ஜி போனுக்கு செலுத்த வேண்டிய உண்மையான விலை ரூ.299-ஆக இருக்கும்என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது.
பொதுவாக ஜியோபாரத் போன்கள் ஜியோடிவி, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் அதன் இசை சேவைகள் உள்ளிட்ட ஜியோவின் பொழுதுபோக்குச் சேவைகளுக்கான அணுகலுடன் வருகின்றன. ஜியோடிவி 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை வழங்குகிறது. அதே நேரத்தில் ஜியோஹாட்ஸ்டார் நேரலை கிரிக்கெட், திரைப்படங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வழங்குகிறது. மேலும் இந்தத் ஜியோபாரத் போன்கள் மில்லியன் கணக்கான பாடல்களுக்கான அணுகலையும் வழங்குகின்றன.

ஜியோபாரத் போன்களில் உள்ள ஜியோபே வழியாக யுபிஐ பணம் செலுத்த முடியும். பின்பு இந்த போன்கள் பேமெண்ட் அலெர்ட்ஸ், மற்றும் சவுண்ட் பாக்ஸ் செயல்பாடுகளையும் ஆதரிக்கின்றன. குடும்பங்களுக்காக, இந்நிறுவனம் பாதுகாப்பான அழைப்பு அம்சங்களுடன் கூடிய ஜியோ சேஃப்டி ஷீல்டை (Jio Safety Shield) வழங்குகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் கண்காணித்துக்கொள்ள உதவும் இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகளையும் (location-monitoring tools) இது வழங்குகிறது.
முன்பு கூறியதுபோல ஆண்டுவிழா சிறப்பு சலுகைக்கு எந்தெந்த ஜியோபாரத் மாடல்கள் தகுதி பெறுகின்றன என்பதை ஜியோ குறிப்பிடவில்லை. இருப்பினும், அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ள 2.4-அங்குலத் திரை, 2000mAh பேட்டரி மற்றும் 4G இணைப்பு உள்ளிட்ட விவரக்குறிப்புகள், ஜியோபாரத் B1 மற்றும் ஜியோபாரத் B2 சாதனங்களின் விவரக்குறிப்புகளுடன் பொருந்துகின்றன. எனவே இந்த போன்கள் தான் சலுகை விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
