Home
News

ஒரேவொரு ரீசார்ஜ்.. ரூ.500 க்கு போட்ட ஜியோ .. 12 ஓடிடி சந்தா.. YouTube பிரீமியம் சந்தா.. 2 ஜிபி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோவில் (Jio) யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மட்டுமல்லாமல், 12 ஓடிடி ஆப்களின் சந்தாவுடன் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால், அதிகப்படியான ஓடிடிகளுடன் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது.

ஜியோ ரூ.500 திட்டத்தில் 12+ ஓடிடி ஆப்களின் சந்தா (12+ OTT Apps) கிடைக்கின்றன. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் கூகுன் ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கிறது. மேலும், ஜியோ ஏஐ கிளவுட் சலுகையையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது.

ஒரேவொரு ரீசார்ஜ்.. ரூ.500 க்கு போட்ட ஜியோ .. 12 ஓடிடி சந்தா.. YouTube!

ஜியோ யூடியூப் பிரீமியம் திட்டம் ரூ.500 விவரங்கள் (Jio YouTube Premium Plan Rs 500 Details): ஓடிடி சலுகைகளுக்கு முன்னதாக வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளை பார்க்கலாம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ளலாம்.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும். ஆகவே, 4ஜி டேட்டாவே 56 ஜிபிக்கு கிடைக்கும். மேலும், 5ஜி டேட்டாவை முற்றிலும் இலவசமாகவும், லிமிட் இல்லாமலும் பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.

ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கிடைக்கிறது. இதில் 50 ஜிபிக்காள கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். ஜியோ கிளவுட் ஆப்பை இன்ஸ்டால் செய்து, ஜியோ மொபைல் நம்பர் வழியாக இதை பயன்படுத்தி கொள்ளலாம். ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கும். இதில் 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். மேலும், நானோ பனானா அணுகலும் கொடுக்கப்படும்.

இந்த ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும். இதை தனியாக பெற்றால் ரூ.35100 செலவாகும். ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவமாக கிடைக்கிறது. இப்போது, ஓடிடி சலுகைகளுக்கு வருவோம். யூடியூப் பிரீமியம் (YouTube Premium) சந்தா கிடைக்கிறது. மேலும், பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition) கொடுக்கப்படுகிறது.

இதுபோக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சந்தாவை 28 நாட்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play) மற்றும் டிஸ்கவரிபிளஸ் (Discovery+) கிடைக்கிறது. சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi) உள்ளது.

சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் யூடியூப் பிரீமியம், பிரைம் வீடியோ மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாக்கள் தனித்தனியாக கிடைக்கும். மற்ற ஓடிடி ஆப்கள் அனைத்தும் ஜியோ டிவி (JioTV) வழியாக கொடுக்கப்படும். ஆகவே, ஜியோ டிவி ஆப் டவுன்லோட் செய்து, இந்த ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio YouTube Premium Plan Along With 12 OTT Apps Subscription At Rs 500 Check List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X