ஒரே Jio ரீசார்ஜ்.. அடுத்த 12 மாசத்துக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அதிக சலுகைகளுடன் இரண்டு வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை கொடுக்கிறது. ரூ.3,599 மற்றும் ரூ.3,999 விலையிலான இந்த இரண்டு திட்டங்களும் 365 நாட்கள் வேலிடிட்டி (Validity) கொண்டவை.
தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமின்றி, பிரீமியம் ஓடிடி சந்தா மற்றும் ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் சலுகைகளை கொடுத்து இருக்கிறது. குறிப்பாக 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டைவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த இரண்டு திட்டங்களின் முழு விவரங்கள் மற்றும் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

1. ஜியோ ரூ.3599 திட்ட விவரங்கள் (Jio Rs.3599 Plan Details):
வேலிடிட்டி (Validity): 365 நாட்கள் (முழுமையாக ஒரு வருடம்).
மொத்த டேட்டா (Total Data): 912.5 ஜிபி கிடைக்கும்.
போஸ்ட் டேட்டா: நாளொன்றுக்கு 2.5 ஜிபி வீதம் வழங்கப்படும். இது முடிந்த பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும்.
கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்: இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் (Unlimited Voice) மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும்.
ட்ரூ 5ஜி (True 5G): தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவச மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கும்.
2. ஜியோ ரூ.,999 திட்ட விவரங்கள் (Jio Rs.3999 Plan Details):
கூடுதல் சலுகையாக இதில் ஃபேன்கோட் (FanCode) சந்தா வழங்கப்படுகிறது. ஜியோடிவி மொபைல் ஆப் (JioTV Mobile App) மூலமாக வாடிக்கையாளர்கள் இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தில் பார்த்ததை போலவே இருக்கின்றன. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவச மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, ஃபேன்கோட் சந்தா மட்டுமே இதில் கூடுதலாக கிடைக்கிறது. இப்போது, ஜியோவின் பிரத்யேக சலுகைகளை பார்க்கலாம். இது 2 திட்டங்களுக்கும் பொருந்தும்.
ஜியோவின் சிறப்பு சலுகைகள் (Jio Special Offer Benefits):
இந்த 2 ரீசார்ஜ் திட்டங்களிலும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் டிஜிட்டல் சலுகைகள் வியப்படைய வைக்கும் இருக்கின்றன. ஏனென்றால், இலவச கூகுள் ஜெமினி ப்ரோ பிளான் (Google Gemini Pro Plan) இரண்டு திட்டங்களிலும் கிடைக்கிறது.ரூ.35,100 மதிப்புள்ள இந்த கூகுள் ஜெமினி ப்ரோவுக்கு 18 மாதம் வேலிடிட்டி கிடைக்கும். இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதனுடன் 5,000 ஜிபி (5 டிபி) கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா (Nano Banana) மற்றும் பிரீமியம் அணுகல்கள் கிடைக்கின்றன. ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா 3 மாத காலத்திற்கு வழங்கப்படுகிறது. ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) சந்தா வழியாக வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி (GB) இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
ஜியோடிவி (JioTV) சலுகையும் இதில் கிடைக்கிறது. கூகுள் ஜெமினி சலுகையை தொடர்ந்து பெற 18 மாதங்கள் முழுவதும் குறைந்தபட்சம் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள அன்லிமிடெட் 5ஜி திட்டத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்க வேண்டும். ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சேவைகளைப் பயன்படுத்த, ரீசார்ஜ் செய்யப்பட்ட அதே ஜியோ நம்பரை கொண்டு லாகின் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications