அம்பானி தரும் ரூ.50,000 சம்பளம்.. வீட்டில் இருந்து Jio வேலை.. 10வது 12வது படித்திருந்தால் போதும்.. என்ன வேலை?
முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ (Jio) நிறுவனத்தில் வேலை செய்ய ஒரு அற்புதமான வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது. குறிப்பாக வீட்டில் இருந்து வேலை (Work from home) பார்க்கும் வசதியுடன் பகுதி நேர வேலை (Part time Job) மற்றும் முழு நேர வேலையை (Full time job) ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது வழங்க துவங்கியுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்குக்கு அனுபவம் உள்ளவர்கள் மட்டுமின்றி, 10வது மற்றும் 12வது படித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.
அம்பானி (Ambani) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வேலைக்கு மாதம் ரூ. 50,000 வரை சம்பளம் (salary) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யார் எல்லாம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்? எப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் (how to apply online job)? எந்தெந்த ஆவணங்களை (documents) நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அம்பானி தரும் ரூ.50,000 சம்பளம்.. வீட்டில் இருந்து Jio வேலை (Jio Work From Home Opportunities):
ஜியோ அறிவித்துள்ள இந்த வீட்டில் இருந்து வேலை வாய்ப்பிற்கு ஆண் (Male) மற்றும் பெண் (Female) என இருவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு அனுபவம் உள்ள விண்ணப்பத்தார்கள் மற்றும் 10வது மற்றும் 12வது படித்தவர்கள் (10th Standard and 12th standard eligible) மற்றும் அனுபவம் இல்லாத பிரெஷர்கள் (freshers) என யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு முழு நேரம் (full time) மற்றும் பகுதி நேரம் (part time) என்று இரண்டு விருப்பங்களை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இந்த வேலைக்காக விண்ணப்பிக்க விரும்பும் பயனர்கள் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (online registration) என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடம் கீழ் கூறப்படும் ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ வீட்டில் இருந்து வேலையில் சேர தேவையான ஆவணங்கள் (Documents needed for Jio Jobs):
- ஆதார் அட்டை (Aadhaar card)
- பான் கார்டு (PAN card)
- வங்கி விபரம் (Bank Account Details)
- வங்கி பாஸ் புக் (Bank Passbooks)
- பள்ளி / கல்லூரி சான்றிதழ்கள் (School / College Certificates)
இந்த அணைத்து ஆவணங்கள் இருந்தால் மட்டுமே விண்ணப்பதாரர்கள் வேலைக்காக அடிப்படை தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று ஜியோவின் வளைக்க தகவல் தெரிவிக்கிறது. அதேபோல், வேலைக்காக விண்ணப்பிக்கும் நபர்களிடம் லேப்டாப் (Laptop), இன்டர்நெட் சேவை (Internet service), மொபைல் போன் (mobile phone), மற்றும் பைக் (bike) கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரூ. 15,000 முதல் ரூ. 50,000 வரை சம்பளம்.. 10வது 12வது படித்திருந்தால் போதும்:
ஜியோவில் வேலை கிடைத்தால், ரூ.15,000 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தனிநபர் அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் சம்பம் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சரி, இப்போது ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.
- முதலில் www.careers.jio.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
- Job opportunities விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- பல விதமான வேலை வாய்ப்புகள் பட்டியலில் காண்பிக்கப்படும்.
- உங்களுக்கு பிடித்தமான வேலையை தேர்வு செய்து Apply Now கிளிக் செய்யவும்.
- பிரெஷர்கள் கட்டாயம் Fresher என்ற விருப்பத்தை கிளிக் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- உங்களுக்கு காண்பிக்கப்படும் விண்ணப்பத்தில் தகவல்களை பதிவிடவும்.
- போட்டோ (Photos) மற்றும் கையொப்பத்தை (Signature) சமர்ப்பிக்கவும்.
- இறுதியாக Submit பட்டனை கிளிக் செய்யவும்.
இந்த மொத்த விண்ணப்ப முறையும் இலவசமாக கிடைக்கிறது. ஆகையால், விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுளள்து.


Click it and Unblock the Notifications