ரிலையன்ஸ் ஜியோ : கட்டண திட்டங்களின் விவரம்.!
இதன் மூலம் மிக நீண்ட நாளாக நாம் அனைவரும் எதிர்நோக்கி காத்துக்கிடந்த ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கட்டணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று சில பெரிய ஜியோ தொடர்பான அறிவிப்புகளை நிகழ்த்தியுள்ளார். நேரலை ஸ்ட்ரீமில் அவர் நிகழ்த்திய அறிவிப்பில் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை தெரிவித்துள்ளார்,
இதன் மூலம் மிக நீண்ட நாளாக நாம் அனைவரும் எதிர்நோக்கி காத்துக்கிடந்த ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கட்டணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதோ அதுபற்றிய தகவல்கள்.

ஜியோ ப்ரைம் உறுப்பினர்
அடிப்படையிலாக, மார்ச் 31 ஆம் தேதி முதல் ஜியோவின் இலவச சேவைகள் முடிகிறது. இனி கோட்பாட்டளவில் நீங்கள் மாதத்திற்கு நிச்சயமாக 30ஜிபி அளவிலான தரவை ரூ.303/-க்கு பெறலாம். உடன் ரூ.99/- செலுத்தி நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் பிரதம உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். மைஜியோ ஆப் அல்லது எந்தவொரு ஜியோ ஆதரவு கடைக்கு செல்வத்தின் மூலமாகவும் நீங்கள் ஜியோ பிரதம உறுப்பினர் ஆகலாம்.

ஜியோ ப்ரைம் என்றால் என்ன.?
வருடத்திற்கு ரூ.99/- செலுத்த நீங்கள் ஒரு ஜியோ ப்ரைம் உறுப்பினர் ஆகலாம். இது ஏற்கனவே உள்ள ஜியோ பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் ஜியோ நெட்வொர்க்கில் சேரும் எந்தவொருக்கும் ஜியோ ப்ரைம் பிரதம உறுப்பினர் ஆகும் தகுதி உண்டு.

மாதம் ரூ.303/-
நீங்கள் ஒரு ஜியோ ப்ரைம் உறுப்பினராக இருந்தால், நீங்கள் மாதம் ரூ.303/- செலுத்த நீங்கள் இப்போது அனுபவிக்கும் அதே இலவச ஜியோ சேவைகளை பெற முடியும்.அதாவது வரம்பற்ற தரவை (நாள் ஒன்றுக்கு 1ஜிபி எல்லை) நீங்கள் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.303/- என்ற கட்டண திட்டத்தின் கீழ் பெறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது

குரல் அழைப்புகள்
இதுவரை ஜியோ வழங்கி வந்த இலவச குரல் அழைப்புகள் தொடரும்.

மேலும் படிக்க
ஜியோ முதல் ஏர்டெல் வரை எல்லோருக்கும் ஆப்பு.? உஷராகிக்கோ.!!


Click it and Unblock the Notifications








