இந்த குட்டி 32 அடி பாயுதே.. Jio இதை தொடர்ந்து செய்யும்.. ஆகாஷ் அம்பானி அறிவிப்பு.. ஆனால் 2026 தொடங்கியதும்?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) ஆனது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் காலாண்டு செயல்திறனை (Quarterly performance) பகிர்ந்து கொண்டது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் ரூ.7,375 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 12.8% அதிகமாகும். இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஏஆர்பியு (ARPU) ஆனது ஆண்டுக்கு ஆண்டு 8.4% அதிகரித்து ரூ.211.4 ஆக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இதை தொடர்ந்து செய்யும்: இதுகுறித்து பேசிய போது, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆன ஆகாஷ் அம்பானி, ஜியோ 500 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களின் அன்றாட வாழ்க்கையின் பல டிஜிட்டல் தேவைகளை நிவர்த்தி செய்வதில் பெருமையுடன் சேவை செய்துள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சியை தூண்டிய ஜியோவின் டீப்-டெக் முயற்சிகளால் இது சாத்தியமானது என்று கூறினார்.

மேலும் இது நமது பிரதமரின் டிஜிட்டல் இந்தியா மிஷனின் முதுகெலும்பாகவும் மாறியுள்ளது. ஜியோ தொடர்ந்து புதிய யுக தொழில்நுட்பங்களை கொண்டு வந்து ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கையையும் மேம்படுத்தும். ஜியோ தனது உள்நாட்டு தொழில்நுட்ப அடுக்கை இந்திய அளவில் வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இப்போது நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லத் தயாராக உள்ளது என்றும் கூறினார்.
ஆனால் 2026 தொடங்கியதும்? சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் 500 மில்லியன் வாடிக்கையாளர் தளம் என்கிற சாதனை - உண்மையிலேயே ஒரு பெரிய சாதனை ஆகும். ஏர்டெல்லை விட குறைவான ஏஆர்பியு-வை கொண்டிருந்தாலும், பெரிய அளவிலான வணிகத்தின் காரணமாக இந்த நிறுவனம் ஏராளமான பணத்தை ஈட்டுகிறது.
குறிப்பாக 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் ரீசார்ஜ் கட்டண உயர்வால் ஜியோ பெரிதும் பயனடையும். ஆனால் இந்த விலை உயர்வு 2026-ன் ஆரம்பத்திலேயே அமலுக்கு வருமா அல்லது இரண்டாம் காலாண்டில் வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. கடந்த ஜூலை மாத வாக்கில் கம்யூனிகேஷன்ஸ் டூடே (Communications Today) வெளியிட்ட அறிக்கை இங்கே குறிப்பிடத்தக்கது
குறிப்பிட்ட அறிக்கையின்படி, கடந்த 2024 இல் செய்ததை போலவே இந்த 2025 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெலிகாம் வல்லுனர்களின் கணிப்பின்படி ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்த வலுவான நிலையில் இருப்பதாக நம்புகின்றனர்.
மேலும், கடந்த முறை அமலுக்கு வந்த மொபைல் ரீசார்ஜ் விலை உயர்வில் டிராய் (TRAI) தலையிடாதது, தனியார் நிறுவனங்களை மறுபடியும் விலை உயர்விற்கு ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது குறைந்த போட்டிதன்மை மற்றும் தொடர்ச்சியான ஒழுங்குமுறை சகிப்புத்தன்மை (Regulatory forbearance) உடன் கூடிய சாதகமான சந்தை சூழலால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க - 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஜியோ நிறுவனமானது ஐபிஓ-விற்கும் (IPO) செல்ல உள்ளது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு ஒரு பெரிய நடவடிக்கையாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான மதிப்பையும் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஜியோவின் ஐபிஓ-க்கு பிறகு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆனது அதன் சில்லறை விற்பனை பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்-ஐ (Reliance Retail Ventures Limited - RRVL) கையப்படுத்தவும் முயற்சிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








