டிசம்பர் 3-ஆம் தேதியோடு 'இலவசங்கள்' முடிவு, ஜியோவாசிகள் நிலை என்ன.?!

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் டிசம்பர் 3-ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனை தொடர்ந்து ஜியோவாசிகளின் நிலை என்ன..? அடுத்தது என்ன.?

|

டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பிறகு ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து இனி எந்த இலவச ஜியோ 4ஜி சேவைகளும் கிடைக்காது. முதலில், செப்டம்பர் 5-ல் அனைத்துஜியோ சிம் அட்டை கொண்ட அனைத்து பயனர்களுக்கும் வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலாக இலவச தரவு, அழைப்புகள் ஆகியவைகளை பெற ஜியோ நிறுவனம் வழிவகுத்தது, நிறுவனம் கூற்றின்படி அது டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் அனைத்து தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களையும் முறைப்படுத்தும் டிராய், அது சாத்தியம் இல்லை என்று கூறி, ஒரு விளம்பர வாய்ப்பானது 90 நாட்கள் மட்டுமே வழங்கப்படலாம் என்று கூறியதன் விளைவாய் ஜியோவின் வெல்கம் ஆஃபர் டிசம்பர் 3-ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. சரி, இதுவரையிலாக இலவச சலுகைகளை அனுபவித்து வந்த வாடிக்கையாளர்கள் நிலை இனி என்ன.?! இப்போதைய ஜியோவின் நிலைத்தன்மைகள் என்னென்ன.?

நிலைத்தன்மை #01

நிலைத்தன்மை #01

இப்போது பெரும்பாலும் இந்த திட்டம் செயல் படுத்தப்படலாம். ஜியோ அதன் வெல்கம் ஆஃபரில் கூறியபடி டேட்டா சலுகைகளை மட்டும் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலாக வழங்கலாம்.

நிலைத்தன்மை #02

நிலைத்தன்மை #02

புதிய ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பணம் செலுத்தி சலுகைகளை பெறலாம். அதாவது ஏற்கனவே வெல்கம் ஆஃபரை அனுபவிக்கும் பயனர்கல் மட்டும் டிசம்பர் இறுதி வரை சலுகைகளை அனுபவிக்கலாம் புதிய பயனர்கள் அநேகமாக கட்டண சேவைகளை அனுபவிக்கும் ஏற்பாடுகள் நிகழ்த்தப் படலாம். அதாவது டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பிறகு ஜியோ சிம் பெறும் புதிய பயனர்கள் வெல்கம் ஆஃபரை அனுபவிக்க இயலாது. அல்லது 4 வாரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ஸ்பெஷல் பிளான் அறிமுகம் செய்யப்பட்டு அது நிறைவடைந்ததும் கட்டண சேவைகள் தொடங்கப்படலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நிலைத்தன்மை #03

நிலைத்தன்மை #03

இதுவொரு சுவாரஸ்யமான நிலைத்தன்மை தான், ஆனால் இதற்க்கும் சாத்தியம் உள்ளது. டிசம்பர் 4-ல், இருந்து ஜியோ அதன் சந்தாதாரர்களுக்கு (பழைய மற்றும் புதிய) ஒரு புதிய விளம்பர வாய்ப்பை வழங்கு மேலும் 90 நாட்களுக்கு இலவச சேவையை கொடுக்க கூடும்.

நிலைத்தன்மை #04

நிலைத்தன்மை #04

கொஞ்சம் கடினமான ஒன்றாக இருப்பினும் இதற்கும் சாத்தியமுண்டு. ஜியோ டிசம்பர் 31 வரை வெல்கம் ஆஃபரை வழங்க முடியாமல் போனதற்கு டிராய் கட்டுப்பாடுகள் தான் காரணம் என்று பழியை டிராய் மீது சுமத்தி விட்டும், பயனர்களிடம், மன்னிப்பு கேட்டுவிட்டும் டிசம்பர் 4-ல் இருந்து தனது அனைத்து பயனர் களுக்கும் கட்டண சேவை திட்டங்களை வழங்கும்.

அறிவிப்பு :

அறிவிப்பு :

முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ சார்ந்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார். அதற்கு பின்னரே தெளிவான விவரங்கள் கிடைக்கப்பெறும். அந்த தகவல்களை உடனுக்குடன் அறிய வாசகர்கள் தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Welcome Offer for free data & calls ends on December 3. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X