போலி அல்ல உண்மையாகவே இலவச 5ஜி சேவை: Jio பயனர்களா நீங்கள்! உடனே இதை செய்யுங்கள்..

|

Jio 5G தற்போது டெல்லி NCR, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 6 இந்திய நகரங்களில் கிடைக்கிறது. ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 2023க்குள் அனைத்து இந்திய நகரங்களிலும் ஜியோ 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது. ஆரம்பக்கட்டமாக 5ஜி சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

ஜியோ ட்ரூ 5ஜி

ஜியோ ட்ரூ 5ஜி

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையானது டெல்லி - என்சிஆர், மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பல முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜியோ 5ஜி சேவைகளானது ஜியோ ட்ரூ 5ஜி என அழைக்கப்படுகிறது.

ஜியோ வெல்கம் ஆஃபர்

ஜியோ வெல்கம் ஆஃபர்

Jio 5ஜி சேவையானது பீட்டா பதிப்பின் கீழ் கிடைப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் ஜியோ 5ஜி கிடைக்கிறது. ஜியோ 5ஜி கிடைக்கும் பகுதிகளில் உள்ள பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபர் மூலம் 5ஜி சேவைகளை இலவசமாக பெறலாம்.

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி நெட்வொர்க் இணைப்பை இலவசமாக பெற தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வெல்கம் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரை அனுபவிக்க அதற்கு இணக்கமான சாதனங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம்.

அதேபோல் ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் பயனர்கள் என யாராக இருந்தாலும் ரூ.239 அல்லது அதற்கு மேல் உள்ள ஜியோ ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதும் அவசியம்.

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் என்றால் என்ன?

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் என்றால் என்ன?

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் ஆனது டெல்லி - என்சிஆர், மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கிறது. இந்த பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். சிறப்பு 5ஜி சலுகையின் கீழ் இந்த பகுதியில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற 5ஜி இணையத்தை அனுபவிக்கலாம்.

ஜியோ 5ஜி இலவசமாக பயன்படுத்துவது எப்படி?

ஜியோ 5ஜி இலவசமாக பயன்படுத்துவது எப்படி?

ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் 5ஜி இணைப்பு நகரங்களில் உள்ள அனைவராலும் 5ஜி இணைப்பை பெற முடியாது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் இருக்கும் ரூ.239க்கு மேல் உள்ள திட்டங்களை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் இலவச 5ஜி சேவையை அனுபவிக்கலாம்.

5ஜி போன் என்பது கட்டாயம்

5ஜி போன் என்பது கட்டாயம்

அதேபோல் 5ஜி நெட்வொர்க் உடன் இணைக்க புதிய 5ஜி சிம் வாங்க வேண்டிய தேவையில்லை. பழைய அதாவது தற்போது வைத்திருக்கும் சிம் கார்ட் மூலமாகவே 5ஜி இணைப்பை பெறலாம். ஜியோ 5ஜி சேவையை பெற பயனர்கள் தங்களது போனில் ரூ.239க்கு மேல் உள்ள திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். 5ஜி போன் என்பது அதைவிட கட்டாயம். அதேபோல் நீங்கள் 5ஜி கிடைக்கும் பகுதியில் இருக்க வேண்டும்.

ஜியோ 5ஜி ஆதரவு ஸ்மார்ட்போன்கள்

ஜியோ 5ஜி ஆதரவு ஸ்மார்ட்போன்கள்

சரி, மேலே குறிப்பிட்ட அனைத்தும் இருக்கிறது 5ஜி பயன்படுத்தலாமா என்றால் அது முடியாது. 5ஜி ஆக்டிவேட் போன் வேண்டும் என்பது கட்டாயம். ஜியோ 5ஜி ஆனது n28, n78, n258 பேண்டுகளில் கிடைக்கும்.

அப்டேட் கண்டிப்பாக தேவை

அப்டேட் கண்டிப்பாக தேவை

ஜியோ 5ஜி ஆக்டிவேட் செய்ய வேறொன்றும் பெரிய விஷயம் தேவையில்லை அந்தந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான அப்டேட்டை வெளியிட வேண்டும். சாம்சங், ஒப்போ, ஒன்பிளஸ், நத்திங், விவோ மற்றும் ரியல்மி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் ஜியோ 5ஜிக்கான அப்டேட்டை வெளியிடத் தொடங்கிவிட்டது.

Best Mobiles in India

English summary
Jio Welcome offer available for selected users: How to activate jio 5g for Free?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X