Home
News

திடீரென 2 இலவச சலுகைகளை அறிவித்த Jio நிறுவனம்.. எந்த திட்டத்தில்? என்ன FREE ஆக கிடைக்கும்?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, உங்களிடம் இருக்கும் தற்போதைய திட்டத்தை பொருட்படுத்தாமல், செப்டம்பர் 7 ஆம் தேதி வரை, அதாவது இந்த வார இறுதியில் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில்) முற்றிலும் இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஜியோ அறிவித்துள்ள இந்த அன்லிமிடெட் டேட்டா ஆபர் ஆனது ரிலைஐன்ஸ் ஜியோவின் ஆண்டுவிழா வார இறுதி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். இதேபோல், 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்கள் ரூ.39 டேட்டா ஆட்-ஆன் பிளானை ரீசார்ஜ் செய்வதன் மூலம் அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை (டெய்லி 3ஜிபி என்கிற எப்யுபி வரம்புடன்) பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென 2 இலவச சலுகைகளை அறிவித்த Jio நிறுவனம்!

இதோடு ஜியோ நிறுவனம் ஏற்கனவே இருக்கும் ரூ.349 திட்டத்துடன் சில தொகுக்கப்பட்ட நன்மைகளையும் சேர்த்து அதை 9வது ஆண்டு "கொண்டாட்ட திட்டமாக" (Celebration Plan) மறுபெயரிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை, ஒரு நாளைக்கு 2 ஜிபி மற்றும் அதற்கு மேற்பட்ட டேட்டாவை வழங்கும் அனைத்து நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களிலும், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டாவை பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கூடவே ஜியோ ஃபைனான்ஸ் மூலம் ஜியோ கோல்ட் மூலம் 2 சதவீதம் கூடுதல் டிஜிட்டல் தங்கம் மற்றும் ரூ.3,000 மதிப்புள்ள கொண்டாட்ட வவுச்சர்களையும் பெறலாம். இந்த வவுச்சர்களில் ஒரு மாத ஜியோஹாட்ஸ்டார் சந்தா, வரம்பற்ற காலர் மியூசிக் உடன் கூடிய ஒரு மாத ஜியோசாவ்ன் ப்ரோ, மூன்று மாத ஜொமாடோ கோல்ட், ஆறு மாத நெட்மெட்ஸ் பர்ஸ்ட் சந்தா, ரிலையன்ஸ் டிஜிட்டல் 100 சதவீத ஆர்சி கேஷ்பேக், அஜியோ ஃபேஷன் டீல்கள் மற்றும் ஈஸ்மைட்ரிப் பயண சலுகைகள் ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, சந்தாதாரர்கள் ஜியோஹோமின் இரண்டு மாத இலவச சோதனையை அனுபவிக்க முடியும். இந்த நன்மைகள் - அனைத்து போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று ஜியோ குறிப்பிட்டுள்ளது. ஒருவேளை உங்களுடைய திட்டம் டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கவில்லை என்றால் அல்லது நீங்கள் ரூ.349 க்கு குறைவான திட்டங்களில் உள்ளீர்கள் என்றால், மேற்கண்ட நன்மைகளை அணுக ரூ.100 பேக்கை மெயின் ரீசார்ஜ் உடன் சேர்க்கலாம்

கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தனது 9வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜியோ நிறுவனம் 500 மில்லியன் பயனர்களை தாண்டியதாக வெளிப்படுத்தும் போது இந்த அறிவிப்புகளை ஜியோ வெளியிட்டது. ஜியோவின் பயனர் தளம் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையை விட அதிகம்" என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

5ஜி சேவையில் ஜியோவின் முக்கிய சாதனைகள்: 5ஜி சேவையில் தான் செய்த ஐந்து முக்கிய சாதனைகளையும் ஜியோ எடுத்துரைத்தது: 1. இந்தியாவில் எங்கிருந்தும் எங்கும் இலவசமாக வாய்ஸ் கால்களை செய்ய ஜியோ வழிவகுத்தது. 2. ஜியோ 500 மில்லியன் இந்தியர்கள் தங்கள் மொபைல்களில் வீடியோக்களை பார்க்கவும் டிஜிட்டல் பணம் செலுத்தவும் உதவியது.

3. ஜியோ இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிற்கு அடித்தளமிட்டது, அதாவது ஆதார், யுபிஐ, ஜன் தன், நேரடி வங்கி பரிமாற்றம் மற்றும் நம்பிக்கையான புதிய தலைமுறைக்கு அதிகாரம் அளித்தது. 4. ஜியோ உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பையும் 100+ யூனிகார்ன்களையும் ஊக்குவித்தது. 5. உலகின் வேகமான 5ஜி வெளியீட்டை இந்தியாவில் செய்தது; இந்தியாவில் ஏஐ புரட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Weekend Free 5G and 4G Data Offer Till Sep 7 How to Get Which Plan to Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X