கதை முடிஞ்சது! உங்க வீட்டுல 2க்கும் மேற்பட்ட ஆட்கள் Jio யூஸ் பண்றங்களா? அம்பானி ஒரு பெரிய ஆப்பு வைக்க போறார்!
நீங்களொரு ஜியோ (Jio) வாடிக்கையாளராக இருந்தால்.. அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்டோர் ஜியோ சிம் கார்டுகளையே பயன்படுத்துகிறீர்களா? ஆம் என்றால் தயாராக இருங்கள், முகேஷ் அம்பானி உங்களுக்கு பெரிய ஆப்பு ஒன்றை கூடிய விரைவில் வைக்க போகிறார்!
அதென்ன ஆப்பு? முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது கடந்த இரண்டு காலாண்டுகளாக ஆவரேஜ் ரெவின்யூ பெர் யூஸரில் (Average revenue per user - ARPU), அதாவது ஒரு பயனருக்கான சராசரி வருவாயில் "சிறப்பாக" செயல்படவில்லை.

ஜியோ நிறுவனத்தின் வருவாய் (Revenue) மற்றும் நிகர லாபம் (Net profit) மேம்பட்டிருந்தாலும் கூட, முகேஷ் அம்பானிக்கு அது போதாது என்பது போல் தெரிகிறது. அவர் ஜியோ நிறுவனத்தின் வருவாயை இன்னும் அதிகரிக்க விரும்புவது போல் தெரிகிறது. அதற்கு ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்க வேண்டும்.
ஏஆர்பியூ-வை அதிகரிக்க வேண்டுமென்றால் ஜியோ நிறுவனத்திற்கு வேறு எந்த வழியுமே கிடையாது. ஒரே ஒரு வழி மட்டும் உள்ளது. அது தனது சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) மீது விலை உயர்வை (Price Hike) அறிவிப்பது மட்டுமே ஆகும்!
உங்க வீட்டில் 2க்கும் மேற்பட்ட ஆட்கள் ஜியோவை பயன்படுத்துகிறார்களா? ஆமெனில், இப்போதே மனதளவில் தயார் ஆகிக்கொள்ளுங்கள். ரிலையன்ஸ் ஜியோ அதன் கட்டண உயர்வை அறிவித்த பின்னர், ரீசார்ஜ் செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் நீங்கள் ஒதுக்கும் பட்ஜெட்டில் ஒரு பெரிய ஓட்டை விழலாம்.
வழக்கமாக இந்திய டெலிகாம் துறையை பொறுத்தவரை, எந்த நிறுவனம் முதலில் கட்டண உயர்வை அறிவிக்கப்போகிறது என்பதே "மில்லியன் டாலர் கேள்வியாக" இருக்கும். ஏதேனும் ஒரு நிறுவனம் விலை உயர்வை அறிவித்துவிட்டால் போதும், மற்ற நிறுவனங்களும் அதை அப்படியே பின்பற்றும்; இப்படி பல முறை நடந்துள்ளது.
அந்த அடிப்படையில், பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமானது அனைத்து வட்டங்களிலிருந்தும் அதன் பேஸிக் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Basic Prepaid Recharge) ஆன ரூ.99-ஐ நீக்கிவிட்டு, புதிய அடிப்படை திட்டமான ரூ.155-ஐ அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல்லின் இந்த நடவடிக்கை, இந்திய டெலிகாம் துறையில் (சமீபத்தில்) நடந்த கட்டண உயர்வுக்கான முதல் படி என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஆகையால், ரிலையன்ஸ் ஜியோவும் கூட அதன் ரீசார்ஜ் திட்டங்களின் மீது கூடிய விரைவில் விலை உயர்வை (Tariff Price Hike) அறிவிக்கும் என்கிற சூழ்நிலை உருவாகி உள்ளது. இருப்பினும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) "உதவினால்" மட்டுமே ஜியோவால் நிம்மதியாக விலை உயர்வை அறிவிக்க முடியும்.
ஏனென்றால் வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே அதன் சந்தாதாரர்களின் (Customers) எண்ணிக்கையை கடுமையாக இழந்து வருகிறது. இதற்கிடையில் விலை உயர்வையும் அறிவித்தால், நிலைமை இன்னும் மோசமாகி விடும்; வோடாபோனை விட்டு வெளியேறும் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே இப்போதைக்கு விஐ (Vi) அதன் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாது.
வோடாபோன் நிறுவனம் அதன் கட்டணங்களை உயர்த்தும் வரை, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களால் முழு வீச்சில் கட்டண உயர்வை அறிவிக்க முடியாது. ஏனென்றால் ஜியோவும், ஏர்டெல்லும் மட்டுமே கட்டணங்களை உயர்த்தி விட்டால், மிகவும் மலிவான விலைக்கு சேவைகளை வழங்கும் ஒரே தனியார் டெலிகாம் நிறுவனமாக வோடாபோன் ஐடியா மாறிவிடும்.
அப்படி ஆகிவிட்டால், வோடபோன் ஐடியாவில் இருந்து வெளியேறும் பயனர்களின் (Exit Users) எண்ணிக்கை குறையும்; அதன் வழியாக ஜியோ அல்லது ஏர்டெல்லுக்கு வரும் புதிய பயனர்களின் (New Users) எண்ணிக்கையும் குறையும். போதாக்குறைக்கு வோடாபோன் ஐடியாவிற்கு புதிய பயனர்களும் கூட கிடைக்கலாம். மேற்கூறிய எதையுமே ஜியோ நடக்க விரும்பாது.
ஆகையால் வோடபோன் ஐடியாவின் நிலைமை சரியாகி, அது விலை உயர்வை (Price Hike) அறிவிக்கும் வரையிலாக, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் கட்டண விலை உயர்வை முழு வீச்சில் அறிவிக்காது. ஆனால் இந்த சூழ்நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்கிற கேள்விக்கு தான் பதிலே இல்லை!


Click it and Unblock the Notifications