இதோ அம்பானி ஆரம்பிச்சிட்டாருல.. எக்ஸ்ட்ரா சார்ஜில் Jio பிரீமியம் 5ஜி.. அடக்கி வைத்திருக்கும் அரசாங்கம்!
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான, முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆனது, இந்தியாவில் 5ஜி எஸ்ஏ (5G SA) சேவைகளை வழங்கும், அதாவது 5ஜி ஸ்டேண்ட்அலோன் (5G Standalone) கட்டமைப்பை வழங்கும் ஒரே நிறுவனமாக உள்ளது
இதற்கிடையில் ஜியோ நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் 5ஜி சேவைகளை, கூடுதல் சேவையாக வழங்கவும் விரும்புகிறது. ஆனால் இதுவரை அதை செய்யவில்லை. ஏனென்றால் இதற்கான விதிகள்,அதாவது பிரீமியம் 5ஜி சேவைக்கான விதிகள் குறித்த தெளிவு இல்லாமல் தொடங்கினால், இது ஒரு சிக்கலாக மாறக்கூடும்.

கூடவே பாகுபாடு காட்டும் நடைமுறைகள் காரணமாக சட்டச் சிக்கல்களில் சிக்குவதையும் ஜியோ நிறுவனம் விரும்பவில்லை. எனவே ஜியோ நிறுவனமானது ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக, அதாவது டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஒப்புதலுக்காக காத்திருப்பதாக டெலிகாம்டால்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சமீபத்திய வருவாய் அறிக்கைக்கு பிந்தைய மாநாட்டு கூட்டத்தில், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் வியூகத் தலைவர் அன்ஷுமன் தாக்கூர், தயாரிப்புகளை பொறுத்தவரை, எங்களின் தொழில்நுட்ப கட்டமைப்புடன் கூடிய 5ஜி பிரீமியம் சேவைகளை எங்களால் வழங்க முடியும். தற்போது, இதில் சில சோதனை அடிப்படையில் செய்யப்படுகின்றன. நாங்கள் முழுமையாக ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும், ஆனால் இந்த தயாரிப்புகள் சந்தைக்கு தயாராக உள்ளன என்று கூறி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
5ஜி ஸ்லைசிங் (5G Slicing) என்பது ஒரு புதிய விஷயம் அல்ல, ஏனெனில் ஜியோ நிறுவனமானது ஏற்கனவே பெருநிறுவனங்களுக்காக இதை செய்து வருகிறது. ஆனால், ஒழுங்குமுறை சார்ந்த வயர்லெஸ் வாடிக்கையாளர் சேவையை பொறுத்தவரை, அதற்கான தொழில்நுட்பம் இருந்தாலும், ஜியோவால் இப்போதைக்கு அதை செய்ய முடியாது.
ரிலையன்ஸ் ஜியோவால், 5ஜி கிளவுட் கேமிங் மற்றும் பல போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்காக நெட்வொர்க் ஸ்லைஸ்களை உருவாக்க முடியும். இது வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும், இருப்பினும், அதை அணுகுவதற்கு அவர்கள் நிச்சயமாக கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால், இது எப்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்பதில் தெளிவான விவரங்கள் இல்லை.
ஜியோ தொடர்பான சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, இந்நிறுவனம் அதன் பயனர்களுக்கு, ஸ்னாப்சாட் பிளஸ் சந்தாவை இலவசமாக வழங்கும் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அவைகள் ரூ.111 மற்றும் ரூ.459 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகும். இவ்விரு திட்டங்களும் இப்போது ஸ்னாப்சாட் பிளஸ் உடன் வருகின்றன. ஆனால் இந்த திட்டங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டவையாக உள்ளது.
ரூ.111 திட்டமானது 5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள், ஜியோ நிறுவனத்திடமிருந்து ஏதேனும் ஒரு பிரீமியம் ஓடிடி விருப்ப தொகுப்பை தேர்ந்தெடுக்கலாம். முதல் விருப்பம் 56 நாட்களுக்கு ஜியோகேம் மொபைலுடன் வருகிறது, இரண்டாவது விருப்பம் ஜியோகேம் மொபைல், ஃபேன்கோட் மற்றும் ஸ்னாப்சாட் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இதன்கீழ் கிடைக்கும் சந்தாக்களை மைஜியோ ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ ரூ.459 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது வரம்பற்ற வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், டெய்லி 2ஜிபி டேட்டா மற்றும் 5ஜிபி போனஸ் டேட்டா ஆகிய நன்மைகள் உள்ளன. மைஜியோ ஆப் வழியாக ஜியோ கேம்ஸ் மொபைல், ஸ்னாப்சாட் பிளஸ் போன்ற கூடுதல் பலன்களும் உள்ளன. மேலும் மூன்று மாதங்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, ஜியோ ஏஐ கிளவுட் 50ஜிபி இலவச ஸ்டோரேஜ், ஜெமினி ஏஐ ப்ரோ சந்தா ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications