ஜியோ VS வி Vs ஏர்டெல்: மலிவு விலையில் ரீசார்ஜ் செய்க கிடைக்கும் திட்டங்கள்.!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் பல்வேறு சூப்பரான ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது.

மேலும் இந்நிறுவனங்கள் இந்த ஆண்டு 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்போது இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்கள் மலிவு விலையில் வழங்கும் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.300-க்குள் ஜியோ வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்
- ஜியோ நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே மொத்தமாக இந்த திட்டத்தில் 42ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர அன்லிமிடெட் கால் அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.
- ஜியோ வழங்கும் ரூ.149 திட்டம் ஆனது தனசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். பின்பு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
- ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ். ஜியோ பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தா உள்ளிட்ட நன்மைகளும் இதில் கிடைக்கும்.
- ஏர்டெல் வழங்கும் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமுக்கான அணுகல் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.
- ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பின்பு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோவுக்கான 30 நாள் மொபைல் பதிப்பு சோதனை, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், விங்க் மியூசிக் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ், அமேசான் ப்ரைம் வீடியோவுக்கான 30 நாள் மொபைல் பதிப்பு சோதனை, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், விங்க் மியூசிக் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வி என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியாவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வீக்கெண்ட் ரோல் ஓவர் சலுகையை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.
- வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.299 திட்டம் ஆனது தினசரி மொத்தமாக 4ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது டபுள் டேட்டாநன்மை இந்த திட்டத்தில் உள்ளது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகள் இந்த திட்டதில் கிடைக்கும்.
- வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.

ரூ.300-க்குள் ஏர்டெல் வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ.300-க்குள் வோடபோன் ஐடியா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்
Comments
Best Mobiles in India
English summary
Jio VS Vs Airtel: Recharge plans available at affordable prices: Read more about this in Tamil GizBot
Story first
published: Thursday, February 18, 2021, 7:32 [IST]


Click it and Unblock the Notifications