ஜியோ vs வோடபோன் ஐடியா vs ஏர்டெல்: தினசரி 3ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அவ்வப்போது புதிய சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவன்கள் கடந்த மாதம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின என்பது. குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை குறைந்த விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா

அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த மூன்று நிறுவனங்களும் 5ஜி சோதனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனங்கள்
3ஜிபி டேட்டா தரும் திட்டங்களை வைத்துள்ளன. அவற்றை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய வங்கி விதி: இனி பணம் எடுத்தாலும் கட்டணம்.. டெபாசிட் செய்தாலும் கட்டணமா? இது ரொம்ப முக்கியம் மக்களே..புதிய வங்கி விதி: இனி பணம் எடுத்தாலும் கட்டணம்.. டெபாசிட் செய்தாலும் கட்டணமா? இது ரொம்ப முக்கியம் மக்களே..

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர Amazon Prime மெம்பர்ஷிப், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் நன்மைகளுடன் வருகிறது ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்.

மீண்டும் தொடங்கும் ஆன்லைன் வகுப்பு- தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த டேப்: அமேசான் அதிரடி சலுகை!மீண்டும் தொடங்கும் ஆன்லைன் வகுப்பு- தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த டேப்: அமேசான் அதிரடி சலுகை!

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.599 ப்ரீபெய்ட்ட திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும்இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. இதுதவிர Disney + Hotstar மொபைல் பதிப்பிற்கான அணுகல்,30 நாள் அமேசான் பிரைம் மொபைல் பதிப்பிற்கான இலவச சோதனை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை இந்த அசத்தலான
திட்டம் வழங்குகிறது.

மலிவு விலையில் புதிய விவோ Y21T ஸ்மார்ட்போன் அறிமுகம்.. சிறப்பான அம்சத்துடன் கம்மி விலையில் எதிர்பார்ப்பு..மலிவு விலையில் புதிய விவோ Y21T ஸ்மார்ட்போன் அறிமுகம்.. சிறப்பான அம்சத்துடன் கம்மி விலையில் எதிர்பார்ப்பு..

 ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 6ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர இந்தத் திட்டம் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் அதன் சொந்த ஜியோ ஆப்ஸ், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2022-ல் முதல் ஸ்மார்ட்போன்., இந்தியாவின் அதிக சார்ஜிங் ஸ்மார்ட்போன்: ரெட்மி கே50 கேமிங் எடிஷன்!2022-ல் முதல் ஸ்மார்ட்போன்., இந்தியாவின் அதிக சார்ஜிங் ஸ்மார்ட்போன்: ரெட்மி கே50 கேமிங் எடிஷன்!

ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்திலும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

 வோடபோன் ஐடியா ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் டேட்டா ரோல்ஓவர், Binge All Night, Vi Movies மற்றும் TVக்கான அணுகல், கூடுதலாக 2ஜிபி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.

ஆப்பிள் நிறுவனம் 2022ல் இத்தனை புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறதா? லிஸ்ட் கொஞ்சம் பெருசு தான்..ஆப்பிள் நிறுவனம் 2022ல் இத்தனை புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறதா? லிஸ்ட் கொஞ்சம் பெருசு தான்..

வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

இவுங்கதான் மாஸ்: 2021-ஐ கலக்கிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ- கேமரா பிரிவில் பலகட்டம் முன்னேற்றம்!இவுங்கதான் மாஸ்: 2021-ஐ கலக்கிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ- கேமரா பிரிவில் பலகட்டம் முன்னேற்றம்!

 வோடபோன் ஐடியா ரூ.501 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.501 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.501 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Disney + Hotstar மொபைல் பதிப்பிற்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

வில் உள்ள பெரும்பாலான

இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவை முன்பு வழங்கிய திட்டங்களின் விலையை அதிகரித்து, திடீரென புதிய கட்டான உயர்வை நடைமுறைப்படுத்தியது. ஆனால், அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மட்டுமே ப்ரீபெய்ட் கட்டண உயர்வை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தவிர்த்து அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்டு சலுகைகளின் விலையை 20% முதல் 25% வரை உயர்த்தியுள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio vs Vi vs Airtel: Prepaid plans that offer 3GB of data daily at budget prices: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X