Just In
- 40 min ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- 1 hr ago
கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?
- 1 hr ago
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
- 2 hrs ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
Don't Miss
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Lifestyle
உங்க குடலில் இந்த பிரச்சினைகள் இருந்தால் உங்களால் உடலுறவில் சரியாக செயல்பட முடியாதாம்...பார்த்து நடந்துக்கோங்க
- Movies
தளபதி 67 ப்ரோமோவில் சிம்பு.. அப்போ அவரு தான் மெயின் வில்லனா?: எகிறும் எதிர்பார்ப்பு... உண்மை என்ன?
- News
பாகிஸ்தானில் இடைத்தேர்தல்.. 33 தொகுதியிலும் நானே போட்டி.. இம்ரான் கான் தடாலடி முடிவு
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ஜியோ, விஐ பயனர்களே- வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள்: தினசரி 1.5ஜிபி டேட்டா: இதோ பட்டியல்.!
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இந்த ஆண்டு 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என
எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது 5ஜி சோதனையை செய்து வருகின்றன. அதேபோல் இந்த இரண்டு நிறுவனங்களும் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். மேலும் ஏர்டெல் நிறுவனமும் தற்போது 5ஜி சோதனையை செய்து வருகிறது, விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஜியோ,வோட்போன் ஐடியா நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் வருடாந்திர ப்ரீபெய்ட்ட திட்டங்களை
வைத்துள்ளன. குறிப்பாக இந்த வருடாந்திர திட்டங்கள் OTTநன்மைகள் உட்பட பல்வேறு சிறப்பான நன்மைகளைவழங்குகின்றன என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த இரண்டு நிறுவனங்களும் தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்கும்வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.2545 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.2545 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா, ஜியோ ஸ்ட்ரீமிங்
உள்ளிட்ட தளங்களுக்கு இலவச அணுகலை வழங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.2545 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டநன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இது தவிர வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதி, Vi ஃபிளாக்ஷிப் இலவச இரவு டேட்டா ஆஃபர் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை,Vi Movies & TVக்கான அணுகல்,2ஜிபி கூடுதல் டேட்டா வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம்
வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்துடன் OTT ஸ்ட்ரீமிங் நன்மைகளைப் பெற விரும்பும் வோடபோன் ஐடியா சந்தாதாரர்களுக்கு ரூ. 3099 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு வருட சந்தாவுடன் வருகிறது. Vi Movies மற்றும் TVக்கான அணுகல்,
வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதி, Vi ஃபிளாக்ஷிப் இலவச இரவு டேட்டா ஆஃபர் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை, 2ஜிபி கூடுதல் டேட்டா வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

அதேபோல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. குறிப்பாக 2 ஆண்டுகளே ஆன நிலையில் அதிக வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது இந்நிறுவனம். இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட
தகவலின்படி கடந்த அக்டோபரில் 41.60 லட்சமாக இருந்தஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைநவம்பரில் 43.40 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 47.20 லட்சமாக இருந்தது. இது நவம்பர் மாதத்தில்42 லட்சமாக சரிந்துவிட்டது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 40 லட்சமாகஉள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் வசமிருந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 86 லட்சமாகும். ஆனால் 2 ஆண்டுகளில்அதாவது 2021-ல் வாடிக்கையாளர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் வயர் மூலமான பிராட்பேண்ட் சேவை 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே கூறியபடி ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 40 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருந்தது. இதே அளவில் இது வளரும்பட்சத்தில் விரைவிலேயே பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஏர்டெல் விஞ்சிவிடும் என்று கூறப்படுகிறது
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470