Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!
ரிலையன்ஸ் ஜியோ தனது வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை 29 நாட்களாகக் குறைத்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இதை ஒரு நல்ல வாய்ப்பாக எண்ணி அதன் வருடாந்திர திட்டத்தின் வேலிடிட்டியை சுமார் 71 நாட்கள் வரை அதிகரித்துள்ளது. தற்பொழுது, உங்களுக்கு பிஎஸ்என்எல்-ன் ரூ.1,999 வருடாந்திர திட்டம் 436 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.1,999 வருடாந்திர திட்டம்
புதிய விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, அதன் அனைத்து வட்டங்களிலும் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் பிஎஸ்என்எல் ரூ.1,999 என்ற வருடாந்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. பிஎஸ்என்எல்-ன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, தினமும் 250 நிமிட குரல் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், பிஎஸ்என்எல் டிவி மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா போன்ற சேவைகளை வழங்கியது.

436 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா? அல்லது 425 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா?
பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ.1,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மீது பிஎஸ்என்எல் இரண்டு விளம்பர சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, 71 நாட்கள் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியுடன் ஒட்டுமொத்த 436 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. அதேபோல், இரண்டாவது விளம்பர சலுகையின் படி 60 நாட்கள் செல்லுபடியை வழங்கி 425 நாட்கள் வேலிடிட்டி நன்மையுடன் கிடைக்கிறது.

436 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமென்றால் உடனே இதை செய்யுங்கள்
இந்த வருடாந்திர திட்டத்தை அதிகபட்ச வேலிடிட்டி நன்மையுடன் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் பிப்ரவரி 28ம் தேதிக்குள் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும், இவர்களுக்கு மட்டுமே 436 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கப்படும்.

425 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்
அதேபோல், மார்ச் 1 முதல் மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.1,999 வருடாந்திரப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு அன்றைய தேதியில் இருந்து அடுத்த 425 நாட்களுக்குவேலிடிட்டி வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.மார்ச் 1 முதல் மார்ச் 31ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால், இந்த 425 நாள் வேலிடிட்டி நன்மை உங்களுக்கு கிடைக்கும்.

கேரளா தவிர அனைத்து வட்டங்களிலும் அறிமுகம்
இந்த புதிய இரண்டு விளம்பர சலுகைகள் கேரளா தவிர அனைத்து வட்டங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் சில வாரங்களுக்கு முன்பு கேரள வட்டத்தில் கூட ரூ.1,999 திட்டத்தை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் மட்டும் அறிமுகப்படுத்தியது, ஆனால் புதிய விளம்பர சலுகைகள் இன்னும் கேரளாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.2,121 திட்டத்தில் குறைக்கப்பட வேலிடிட்டி
இந்த பிஎஸ்என்எல் ரூ.1,999 திட்டத்துடன் கிடைக்கும் பிற கூடுதல் நன்மைகளான பிஎஸ்என்எல் டிவி மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் போன்ற கூடுதல் சந்தாக்கள் மட்டும், 365 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்க. ஜியோவின் ரூ.2,121 திட்டத்தின் 365 நாட்கள் வேலிடிட்டி 29 நாட்கள் குறைக்கப்பட்டு, தற்பொழுது வெறும் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் செல்லுபடியாகிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications