Jio vs BSNL: மலிவு விலையில் அதிக நன்மைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

|

ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனம் மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட அதிவேக 4ஜி சேவையை வழங்குகிறது. குறிப்பாக ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டியாகப் பல அருமையான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.

பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம்

அதேபோல் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கம்மி விலையில் 1ஜிபி டேட்டாவுடன் அதிகநன்மைகளை வழங்குகின்றன. அந்த திட்டங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

WhatsApp ட்ரிக்ஸ்- ரிப்ளை மெசேஜ் அதுவா போகும்.. மொபைலை தொடவே வேணாம்..WhatsApp ட்ரிக்ஸ்- ரிப்ளை மெசேஜ் அதுவா போகும்.. மொபைலை தொடவே வேணாம்..

ஜியோ நிறுவனம்

அதாவது ஜியோ நிறுவனம் ரூ.209 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. அதபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.184 விலையில் ஒரு
ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கரெக்ட்டா பிளான் செஞ்சா ரூ.999 செலவில் உறுதியா OnePlus 10R 5G Prime Edition வாங்கிடலாம்.!கரெக்ட்டா பிளான் செஞ்சா ரூ.999 செலவில் உறுதியா OnePlus 10R 5G Prime Edition வாங்கிடலாம்.!

 ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஜியோ சினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி,ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும்.

அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 64 Kbps ஆக குறையும்.

ரூ.12,000 விலைக்குள் பெஸ்டான Oppo வாங்கலாம்.! ஆரம்ப விலை வெறும் ரூ.9,490 மட்டுமே.!ரூ.12,000 விலைக்குள் பெஸ்டான Oppo வாங்கலாம்.! ஆரம்ப விலை வெறும் ரூ.9,490 மட்டுமே.!

பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். மேலும் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

அதேபோல் டெலிஃபோனிக் டிஜிட்டல் மீடியா மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்கள், Lystn Podcast services போன்ற பல நன்மைகள் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 84 Kbps ஆக குறையும்.

என்ன வித்தியாசம்?

என்ன வித்தியாசம்?

ஜியோ நிறுவனம் சற்று உயர்வான விலையில் 1ஜிபி டேட்டா தரும் திட்டத்தை வழங்கினாலும் 4ஜி சேவை வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் 1ஜிபி டேட்டா தரும் திட்டத்தை வைத்திருந்தாலும் 4ஜி சேவையை வழங்கவில்லை.

அதேபோல் ஜியோ நிறுவனம் தனது திட்டத்தில் ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலை வழங்குகிறது. கண்டிப்பாக இது பயனுள்ள வகையில் இருக்கும். குறிப்பாக ஜியோவின் திட்டத்துடன் ஒப்பிடும்போது BSNL இன் திட்டம் பெரிதாகத் தெரியவில்லை. எனவே ஜியோவின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

மேலும் ஜியோ நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

Flipkart Big Billion Days: உங்க பழைய போனை விற்றாலே போதும், புது 5G போன் வாங்கலாம்!Flipkart Big Billion Days: உங்க பழைய போனை விற்றாலே போதும், புது 5G போன் வாங்கலாம்!

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றஅட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றஅட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றஅட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Jio vs BSNL: Prepaid plans that offer more benefits at lower prices!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X