சொதப்பிய Jio.. இனிமேல் 200 ரூபாய் ரீசார்ஜ்னா.. அது Airtel கிட்ட மட்டும் தான்!
டூயல் சிம் கார்டு மொபைல் போனை வைத்து இருக்கும் பெரும்பாலான மக்கள், ஒன்றில் ஜியோ சிம் கார்ட்டையும், மற்றொன்றில் ஏர்டெல் சிம் கார்ட்டையும் வைத்துள்ளனர். ஏனென்றால் அவர்களுக்கு நன்றாக தெரியும் "Jio Vs Airtel - யார் பெஸ்ட்?" என்கிற போட்டிக்கு ஒரு நிலையான பதில் கிடைக்கபோவதே இல்லை!
ஆகையால் தான் நம்மில் பலரும், அந்த நேரத்திற்கு அல்லது அடுத்த ஒரு மாதத்திற்கு என்ன தேவையோ.. அதை யார் சிறப்பான முறையில் வழங்குகிறார்களோ.. அதற்கேற்ப ஜியோ சேவைகளையும், ஏர்டெல் சேவைகளையும் ஒரே நேரத்தில் - மாறி மாறி - பயன்படுத்தி வருகிறோம்!

புத்திசாலிதமான டூயல் சிம் கார்டு பயனர்கள்!
உதாரணத்திற்கு, உங்களுக்கு திடீர் டேட்டா தேவைகள் ஏற்பட்டால்.. ரூ.65 மதிப்புள்ள ஏர்டெல் டேட்டா-ஒன்லி ரீசார்ஜ், வெறும் 4ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும்; மறுகையில் உள்ள ஜியோவின் ரூ.61 டேட்டா-ஒன்லி ரீசார்ஜ் மொத்தம் 6ஜிபி டேட்டவை வழங்கும்.
இந்த இடத்தில் புத்திசாலித்தமான டூயல் சிம் கார்டு பயனர்கள் அனைவருமே ஜியோவின் பக்கமே சாய்வார்கள். இப்படி பல எடுத்துக்காட்டுகளை முன்வைத்து ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் தேவைகளை எளிமையாக பிரித்தெடுத்து அவர்களுக்கான பெஸ்ட் ரீசார்ஜை தேர்வு செய்ய வைக்க முடியும்!
ஒருவேளை உங்கள் தேவை பட்ஜெட் விலையில் நீண்ட வேலிடிட்டி என்றால்?
நீங்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் சிம் கார்டுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்றால்.. ரூ.200 க்குள் அதிக வேலிடிட்டியை வழங்கும் ஒரு நல்ல பேஸிக் ரீசார்ஜை (Basic Recharge) தேடுகிறீர்கள் என்றால்.. நீங்கள் எந்த நிறுவனத்தின் பிளானை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரியுமா? - கண்டிப்பாக ஏர்டெல் தான்!
ஏனென்றால் ரூ.200-க்குள் பெஸ்ட் வேலிடிட்டியை வழங்கும் ரீசார்ஜ் - ஏர்டெல் நிறுவனத்திடம் தான் உள்ளது. அது ரூ.199 ரீசார்ஜ் ஆகும். இதே விலையில் ரிலையஸின் ஜியோவிடமும் ஒரு ரீசார்ஜ் உள்ளதால், இந்த விஷயத்தில் நீங்கள் சற்றே குழப்பம் அடையலாம். அந்த குழப்பத்தை நீக்க, இவ்விரு திட்டங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்!
Jio ரூ 199 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்:
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199 திட்டமானது, டெய்லி 1.5 ஜிபி டேட்டா என்கிற விகிதம் மொத்தம் 34.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
உடன் அன்லிமிடெட் வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோசெக்யூரிட்டி (JioSecurity) மற்றும் ஜியோக்ளவுட் (JioCloud) போன்ற நன்மைகளையும் வழங்குகிறது. ஆனால், இந்த திட்டம் வெறும் 23 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகவும்!
Airtel ரூ 199 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்:
மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல்லின் ரூ.199 திட்டமானது, ஜியோவின் ரூ.199-ஐ போல் இல்லாமல் முழுதாக 30 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது அதே விலையில் 7 நாட்கள் என்கிற கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.199-ன் மற்ற நன்மைகளை பொறுத்தவரை, இது மொத்தம் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள், ஹலோட்யூன்ஸ் (Helotunes), வின்க் மியூசிக் (Wynk Music) போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.
சப்ப மேட்டர்ல சொதப்பிய Jio.. சுதாரித்த Airtel
அதிக அளவிலான டேட்டாவை வழங்கும் நோக்கத்தின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது வேலிடிட்டியில் கோட்டை விட்டுவிட்டது.
ஆனால் ஏர்டெல் நிறுவனமோ.. ரூ.200 க்குள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பட்ஜெட்வாசிகளுக்கு அதிக டேட்டா தேவைப்படாது; அவர்கள் வேலிடிட்டியில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பதை புரிந்து, சுதாரித்துக்கொண்டது!


Click it and Unblock the Notifications








