ஏர்டெல், ஜியோ.. ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம்.. எது அதிக சலுகைகள் வழங்குகிறது? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் வழங்கும் சலுகைகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் இந்நிறுவனங்கள் 859 விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இதில் எந்த நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 859 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினம் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
அதன்படி ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) வழங்குகிறது இந்த திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 859 prepaid recharge plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்திலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர சில சிறப்பான சலுகைகள் இதில் கிடைக்கும்.

அதாவது ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் ரிவார்ட்ஸ்மினி சந்தா (Rewards Mini Subscription), அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எது சிறந்தது? ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் அதிக டேட்டா மற்றும் அதிக நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ஜியோ திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) நன்மையும் இருப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








