Home
News

ஜியோ VS ஏர்டெல்.. ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் எது அதிக சலுகைகளை வழங்குகிறது?

ஜியோ (jio), ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் அவ்வப்போது அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன. அதேபோல் இந்நிறுவனங்கள் விரைவில் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. எனவே இப்போதே அதிக வேலிடிட்டி தரும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

அதேபோல் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.200 பட்ஜெட்டில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது ரூ.200 பட்ஜெட்டில் எந்த நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Jio vs Airtel.. ரூ.200-க்கு கீழ் திட்டங்கள்.. எது அதிக சலுகை வழங்கும்?

ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 155 plan) ஆனது 1ஜிபி டேட்டா (1GB data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் 300 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும். குறிப்பாக ஏர்டெல்லின் சிம்மை செயலில் வைத்திருக்க இதுபோன்ற திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 179 plan) ஆனது மொத்தமாக 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். இதுதவிர விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) நன்மைகள் இதில் உள்ளன.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 199 plan) ரீீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) நன்மைகள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அதோடு இதில் ரூ.5 டாக்டைம் வேல்யூ கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 209 plan) தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும். இதுதவிர விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), உள்ளிட்ட பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்.

Jio vs Airtel.. ரூ.200-க்கு கீழ் திட்டங்கள்.. எது அதிக சலுகை வழங்கும்?

ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 149 plan) தினசரி 1ஜிபி டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 20ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். மேலும் இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது.

ஜியோவின் ரூ. 179 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 179 plan) தினசரி 1ஜிபி டேட்டாநன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 24ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். மேலும் இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும்.

Jio vs Airtel.. ரூ.200-க்கு கீழ் திட்டங்கள்.. எது அதிக சலுகை வழங்கும்?

ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 199 plan) தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 34.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். அதேபோல் இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud)) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும்

ஜியோவின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 209 plan) தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். அதேபோல் இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது.

குறிப்பாக ரூ.200 பட்ஜெட்டில் ஏர்டெல் நிறுவனத்தை விட ஜியோ நிறுவனம் தான் அதிக நன்மைகளை வழங்குகிறது. எனவே ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
jio vs airtel which company offers more benefits on plans under rs 200 check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X