Home
News

ரூ.309, ரூ.509, ரூ.244, ரூ.399, ரூ.345, ரூ.352, ரூ.297, ரூ.447, ரூ.249/- எது பெஸ்ட்.!?

எதை கைவிடுவது.? எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் நம்மையெல்லாம் ஆளும் இந்த தருணத்தில் நீங்கள் சிறந்த மற்றும் ஒரு தெளிவான முடிவை எடுக்க செய்ய ஒரு சுருக்கமான வாய்ப்பை இங்கே வழங்குகிறோம்.

By Muthuraj

எல்லா பக்கமும் அதிக அளவிலான சலுகைகள், எல்லா நிறுவனங்களும் அள்ளிக்கொடுக்கும் மலிவான கட்டண திட்டங்கள், கூடவே கட்டண திருத்தங்கள், செல்லுபடி காலம் நீட்டிப்புகள் மற்றும் பல. உண்மையாக சொல்லப்போனால் இது மிகவும் குழப்பமான ஒரு தருணம் என்றே கூறலாம். வெவ்வேறு ஆபரேட்டர்களிடம் இருந்தும் பல இலாபகரமான தொகுக்கப்பட்ட திட்டங்கள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்பது வெளிப்படை.

எதை கைவிடுவது.? எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் நம்மையெல்லாம் ஆளும் இந்த தருணத்தில் நீங்கள் சிறந்த மற்றும் ஒரு தெளிவான முடிவை எடுக்க செய்ய ஒரு சுருக்கமான வாய்ப்பை இங்கே வழங்குகிறோம்.

ரூ.309/- மற்றும் ரூ.509/-

ரூ.309/- மற்றும் ரூ.509/-

இந்த குழப்பத்திற்கு எல்லாம் காரணகர்த்தாவான, அடித்தளம் போட்ட ஜியோ நிறுவனத்தின் சமீபத்திய மற்றும் தற்போதைய தண் தணா தண் ஆபர் ஆனது ரூ.309/- மற்றும் ரூ.509/- என்ற சிறப்பான சலுகைகளை வழங்குகிறது.

நன்மைகள்

நன்மைகள்

இந்த புதிய சலுகைகளின் கீழ் ஜியோ ப்ரைம் உறுப்பினர்கள் நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா பெறுவர். இந்த சலுகை ஆனது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். மறுபக்கம் ரூ.509/- திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை 84 நாட்களுக்கு பெறுவர். இது தவிர, வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் இலவச அணுகல்களும் உங்களுக்கு கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.244, ரூ.399 மற்றும் ரூ.345/-

ஏர்டெல் ரூ.244, ரூ.399 மற்றும் ரூ.345/-

இதற்கு போட்டியாக ஏர்டெல் ரூ.244, ரூ.399 மற்றும் ரூ.345/- ஆகிய மூன்று சூப்பர் திட்டங்களை வழங்குகிறது. ரூ.244 திட்டத்தின் கீழ் ஏர்டெல் டூ ஏர்டெல் இலவச வரம்பற்ற உள்ளூர் + வெளியூர் அழைப்புகள் உடன் நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை 70 நாட்களுக்கு அனுபவிக்க முடியும். மேலும், நீங்கள் ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் இலவச அழைப்புகளை பெறலாம், ஒருவாரம் முழுவதும் 1200 நிமிடங்கள் என்ற நேர வரையறை கிடைக்கும். அது முடிந்த பின்னர் நிமிடத்திற்கு 10 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

நன்மைகள்

நன்மைகள்

மற்றொரு 70 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.399/- திட்டமானது இலவச வரம்பற்ற உள்ளூர் + வெளியூர் அழைப்புக்ளுடன் இணைந்து ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும். மேலும்,ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும், 28 நாட்களுக்கு செலுப்படியாகும் ரூ.345/- என்ற ஏர்டெல் திட்டம் ஒன்றும் கிடைக்கிறது. இந்த திட்டம் மேலும் இலவச வரம்பற்ற உள்ளூர் + வெளியூர் அழைப்புகளையும் வழங்குகிறது.

வோடபோன் ரூ.352

வோடபோன் ரூ.352

வோடபோன் அதன் பயனர்களுக்கு இலவச உள்ளூர் + வெளியூர் அழைப்புளுடன் சேர்த்து ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ரூ.352/- என்றொரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 56 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் எந்த இலவச எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடையாது மற்றும் இது சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தற்போது கிடைக்கிறது.

ஐடியா

ஐடியா

ரூ.297/- திட்டமானது ஐடியா டூ ஐடியா உள்ளூர் மற்றும் வெளியூர் வரம்பற்ற அழைப்புகளுடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கிறது மற்றும் இது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ.447/- திட்டமானது எந்த நெட்வெர்க் உடனாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர் வரம்பற்ற அழைப்புகளுடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கிறது மற்றும் இதுவும் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

நன்மைகள்

நன்மைகள்

அழைப்புகளை பொறுத்தமட்டில் ரூ.297 திட்டம் நாளொன்றுக்கு 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1200 நிமிடங்கள் குரல் அழைப்புகளை வழங்கும். மறுபக்கம் ரூ.447 திட்டமானது 70 நாட்களுக்கும் மொத்தமாக வெறும் 3000 நிமிடங்கள் அழைப்புகளை மட்டுமே வழங்குகிறது. இந்த எல்லை முடிந்த பிறகு 30பைசா / நிமிடம் என்ற கட்டண விகிதத்தை பெறுவீர்கள்.

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

அரசிற்குச் சொந்தமான தொலைத் ஆபரேட்டர் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ரூ.249/-க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இது புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதன் கீழ் மாதத்திற்கு 300 ஜிபி தரவு கிடைக்கும். நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா தீரும் வரை 2எம்பிபிஎஸ் வேகத்திலும் அதற்கு பின்னர் 1 எம்பிபிஎஸ் வேகத்திலும் தரவு கிடைக்கும். உடன் இலவச வரம்பற்ற அழைப்புகள் (இரவு 9 மணிக்கு ஆரம்பித்து காலை 7 மணி வரை) இணைந்து எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

எது பெஸ்ட்.?

எது பெஸ்ட்.?

உங்களுக்கு 3 மாதங்களுக்கான டேட்டா மட்டுமே அதிக பிரதானம் என்றால் ஜியோ என்பது நல்லதொரு தேர்வு, அழைப்புகளுடன் கூடிய டேட்டா வேண்டுமென்றால் ஏர்டெல் உங்களுக்கு நல்லதொரு தேர்வாக இருக்கும், ஏனெனில் அழைப்புகளை பொருத்தமட்டில் ஜியோ முன்னேற்றம் அடையவில்லை. அதே சமயம் நீங்கள் தினசரி மற்றும் வாராந்திர அழைப்பு நிமிடங்கள் வரம்பிலும் கவனமாக இருக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டவை ஜியோவும் வழங்குகிறது உடன் பிஎஸ்என்எல் நிறுவனமும் வழங்குகிறது. வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் போட்டியில் நீடித்தாலும் பின்தங்கியே உள்ளது என்பது வெளிப்படை.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

அம்பானிக்கு சம்பாதித்தது பற்றவில்லை போல, அடுத்த மாஸ்டர் பிளான் ரெடி.!

Best Mobiles in India

English summary
Reliance Jio Dhan Dhana Dhan offer vs Airtel vs Vodafone vs Idea vs BSNL: Should you switch? Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X