நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா தரும் சிறந்த டெலிகாம் நிறுவனம் எது?

ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் புதிய 249/-திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்கள் ஐபிஎஸ் 2018 போட்டிகளை மனதிற்கொண்ட பல்வேறு டேட்டா சலுகைகள் மற்றும் பல திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் சிறந்த திட்டங்களை தற்சமயம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல் நிறுவனம் ரூ.349/-திட்டத்தில் சில திருந்தங்களை அறிவித்துள்ளது, அதன்பின்பு
தற்சமயம் அந்நிறுவனம் அறிவித்துள்ள 249-திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவங்களின் ஐபில் கிரிக்கெட் சீசன் திட்டங்களை தொடர்ந்து, அரசுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் அதன் ஐபில் கிரிக்கெட் திட்டமான ரூ.248/-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி வழங்கப்படுகிறது. மேலும் வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் அதன் சிறந்த திட்டத்ததை
அறிவித்துள்ளது.

 ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்சமயம் புதிய லேப்டாப் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த ஜியோ. இந்நிறுவனம் சமீபத்தில் ரூ.299/-என்ற திட்டத்தை அறிவித்து இருந்தது.இந்த ரூ.299-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது, மொத்தமாக 84ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.குறிப்பா 28நாட்கள் மட்டுமே இந்த திட்டத்தை உபயோகம் செய்ய முடியும். மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் இதனுடன் வழங்கப்படுகிறது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் புதிய ரூ.249/-திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளது, மொத்தமாக 84ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அதன்பின்பு 28நாட்கள் மட்டுமே இந்த திட்டத்தை உபயோகம் செய்ய முடியும். மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் இதனுடன்
வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியா ஏர்டெல் 349/-திட்டத்தை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 வோடபோன்:

வோடபோன்:

வோடபோன் நிறுவனம் இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, இந்நிறுவனம் ரூ.549/-என்ன திட்டத்தில் 3.5ஜிபி டேட்டாவை அறிவித்துள்ளது, குறிப்பாக இந்த திட்டத்தை 28 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு ரூ.245/-என்ற வோடபோன் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 2.5ஜிபி டேட்டாவை பெற முடியும், இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
 ஐடியா:

ஐடியா:

ஐடியா நிறுவனம் பொறுத்தவரை சிறந்த 3ஜிபி டேட்டா தரும் திட்டத்தை வழங்கவில்லை, இருந்தபோதிலும் அதன் ரூ.357/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் இலவச கால் அழைப்புகள், ரோமிங், 100எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Jio vs Airtel vs Vodafone vs Idea Get whopping 3 GB data per day at this price; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X