ஏர்டெல், வோடபோன் கிட்ட 3 தான் இருக்கு.. ஆனா ஜியோ கிட்ட மொத்தம் 8 இருக்கு!

|

மொபைல் ரீசார்ஜ் (Mobile Recharge) என்று வந்து விட்டால் நம்மில் பலரும் ரூ.300 க்குள் என்கிற பட்ஜெட்டை தான் ஒதுக்குகிறோம்.

ஒருவேளை நீங்களும் அந்த பட்டியலில் இருக்கிறீர்கள் என்றால்.. அதாவது மொபைல் ரீசார்ஜ்ஜிற்காக மாதந்தோறும் நீங்கள் செலவு செய்ய விரும்பும் தொகை ரூ.300 தான் என்றால்.. இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

பல தேவைகள்.. சில ரீசார்ஜ்கள்!

பல தேவைகள்.. சில ரீசார்ஜ்கள்!

வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியாவில் இருந்து எக்கச்சக்கமான ப்ரீபெய்ட் திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

ஆனாலும் கூட, பட்ஜெட் விலை பிளான்கள் என்று வரும்போது நமக்கு குறைந்த எண்ணிக்கையிலான விருப்பங்களே அணுக கிடைக்கிறது.

ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டங்கள் அறிவிப்பு: என்ன விலை? எங்கெல்லாம் கிடைக்கும்?ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டங்கள் அறிவிப்பு: என்ன விலை? எங்கெல்லாம் கிடைக்கும்?

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

அவைகளில் எது பெஸ்ட் என்று கண்டுபிடிப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்தால்.. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களிடம் இருந்து ரூ.300 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் சிறந்த திட்டங்களின் பட்டியல் இதோ!

இந்த பட்டியலில் 3 ஏர்டெல் திட்டங்களும், 3 வோடாபோன் ஐடியா திட்டங்களும் மற்றும் 8 ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களும் உள்ளன!

ஏர்டெல் ரூ.239 மற்றும் ரூ.265

ஏர்டெல் ரூ.239 மற்றும் ரூ.265

ஏர்டெல் ரூ.239 திட்டம்: மொத்தம் 24 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம், ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், இலவச Hellotunes மற்றும் Wynk Music அணுகல் போன்ற நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.265 திட்டம்: ரூ.239-ஜ போலவே இதுவும் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், இலவச ஹெலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் ம்யூசிக் அணுகல் போன்ற நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இது 28 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கும்.

இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!

ஏர்டெல் ரூ.299

ஏர்டெல் ரூ.299

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 1.5ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற நன்மைகள் அணுக கிடைக்கும்.

இந்த திட்டம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது!

வோடாபோன் ஐடியாவின் ரூ.199, ரூ.219 மற்றும் ரூ 249 திட்டம்

வோடாபோன் ஐடியாவின் ரூ.199, ரூ.219 மற்றும் ரூ 249 திட்டம்

வோடாபோன் ஐடியா ரூ.199 திட்டம்: இது அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், டெய்லி 1ஜிபி டேட்டா, இலவச விஐ டிவி அண்ட் மூவீஸ் போன்ற நன்மைகளை 18 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் வழங்கும்.

வோடாபோன் ஐடியா ரூ.219 திட்டம்: இதுவும் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், டெய்லி 1ஜிபி டேட்டா, இலவச விஐ டிவி அண்ட் மூவீஸ் போன்ற நன்மைகளை வழங்கும். ஆனால் இதன் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும்.

5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

வோடாபோன் ஐடியா ரூ 249 திட்டம்:

வோடாபோன் ஐடியா ரூ 249 திட்டம்:

இது ரூ.219-ஐ போலவே, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், இலவச விஐ டிவி அண்ட் மூவீஸ் போன்ற நன்மைகளை 21 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தின் கீழ் வழங்குகிறது.

ஆனால் இது தினமும் 1.5ஜிபி என்கிற டேட்டாவை வழங்கும்.

ஜியோ ரூ.149 மற்றும் ரூ.179 திட்டம்

ஜியோ ரூ.149 மற்றும் ரூ.179 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 திட்டம்: இது 20 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1ஜிபி டேட்டா, இலவச ஜியோ ஆப்ஸ் போன்ற நன்மைகளை வழங்கும்.

ஜியோ ரூ 179 திட்டம்: இந்த ரீசார்ஜ் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1ஜிபி டேட்டா, இலவச ஜியோ ஆப்ஸ் போன்ற நன்மைகளை வழங்கும். இதன் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

Jio, Airtel நிறுவனங்களின் 5G ரீசார்ஜ்களின் விலை நிர்ணயம் இவ்ளோ தானா?Jio, Airtel நிறுவனங்களின் 5G ரீசார்ஜ்களின் விலை நிர்ணயம் இவ்ளோ தானா?

ஜியோ ரூ.199 மற்றும் ரூ.209 திட்டம்:

ஜியோ ரூ.199 மற்றும் ரூ.209 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 திட்டம்: இது 23 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா, இலவச ஜியோ ஆப்ஸ் போன்ற நன்மைகளை வழங்கும்.

ஜியோ ரூ.209 திட்டம்: இது அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1ஜிபி டேட்டா, இலவச ஜியோ ஆப்ஸ் போன்ற நன்மைகளை வழங்கும். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.239 மற்றும் ரூ.249 திட்டம்

ஜியோ ரூ.239 மற்றும் ரூ.249 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ 239 திட்டம்: இது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா, இலவச ஜியோ ஆப்ஸ் போன்ற நன்மைகளை வழங்கும்.

ஜியோ ரூ 249 திட்டம்: இந்த ரீசார்ஜ்ஜின் கீழ், அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 2ஜிபி அளவிலான டேட்டா, இலவச ஜியோ ஆப்ஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.259 மற்றும் ரூ.299 திட்டம்

ஜியோ ரூ.259 மற்றும் ரூ.299 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ 259 திட்டம்: இது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா, இலவச ஜியோ ஆப்ஸ் போன்ற நன்மைகளை வழங்கும்.

ஜியோ ரூ 299 திட்டம்: ரூ.300 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பெஸ்ட் ஜியோ ரீசார்ஜ்கள் என்கிற பட்டியலில் கடைசியாக உள்ள இது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி அளவிலான டேட்டா, இலவச ஜியோ ஆப்ஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Jio Vs Airtel Vs Vodafone Top Budget Price Prepaid Plans 2022 Best Recharge Under Rs 300

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X