Home
News

ஒரு நாளைக்கு 2ஜிபி வேண்டுமா.? இந்த மூன்றில் ஒன்றுதான் பெஸ்ட்.!

இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் வரம்பற்ற ரோமிங் அழைப்புகள் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று திட்டங்களில் எது சிறந்தது.?

By Muthuraj

ஒருகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் "புத்தாண்டு 2018" சலுகையின் ஒரு பகுதியாக இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் ரூ.199/-க்கு அல்லது ரூ.299 /-க்கு முறையே ஒரு நாளைக்கு 1.2 ஜிபி மற்றும் 2 ஜிபி அளவிலான 4 ஜி தரவை பெறலாம்.

ஒரு நாளைக்கு 2ஜிபி வேண்டுமா.? இந்த மூன்றில் ஒன்றுதான் பெஸ்ட்.!

இந்த சமீபத்திய ஜியோ திட்டங்கள் மலிவு விலையில் இன்னும் கூடுதலான டேட்டாவே வழங்கும்படி இதர நிறுவனங்களை தூண்டுகிறது என்றே கூறலாம். மறுகையில் உள்ள ஏர்டெல் அதன் ரூ.349/- திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

மூன்று திட்டங்களில் எது சிறந்தது.?

மூன்று திட்டங்களில் எது சிறந்தது.?

வோடபோன் இந்தியா நிறுவனமானது ரூ.348/- என்ற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் வரம்பற்ற ரோமிங் அழைப்புகள் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று திட்டங்களில் எது சிறந்தது.?

ஜியோ ரூ.299

ஜியோ ரூ.299

ஜியோவின் ரூ.299/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி அளவிலான வரம்பற்ற மற்றும் இலவச அதிவேக தரவை வழங்குகிறது. இந்த வாய்ப்பின் கீழ், சந்தாதாரர்கள் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 4ஜி தரவை பயன்படுத்தலாம். மேலும் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது இலவச மற்றும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது.

ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல்

ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல்

உடன் இலவச மற்றும் வரம்பற்ற எஸ்எம்எஸ் நன்மையையும் அளிக்கிறது. கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்கள் மைஜியோ, ஜியோசாட், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோம்யூசிக், ஜியோஎக்ஸ்பிரஸ்நியூஸ், ஜியோமணி போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.

வோடாபோன் ரூ.348

வோடாபோன் ரூ.348

வோடாபோனின் ரூ.348/- ஆனது நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 4ஜி/3ஜி/2ஜி தரவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதன் பொருள் பயனர்கள், இதன் செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 56 ஜிபி டேட்டாவை அனுபவிக்கலாம்.

வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி

வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி

தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிம் இந்த ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளையும், நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் என்கிற ரோமிங் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. ஒரு வாரத்தில், பயனர்கள் 1000 அழைப்பு நிமிடங்களை பயன்படுத்தலாம்.

ஏர்டெல் ரூ.349

ஏர்டெல் ரூ.349

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி தரவை வழங்குகிறது. இதன் பொருள் இந்த மாத ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் வழியாக மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும்.

வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி

வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி

ஏர்டெல் வலைத்தளத்தின்படி, இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற ரோமிங் உள்வரும், வெளிச்செல்லும் அழைப்புகளுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளையும் வழங்கும். உடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Vs Airtel Vs Vodafone: Prepaid Recharge Plan With 2GB Per Day Data Compared. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X