தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கும் டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.!
ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் இந்த பல்வேறு புதிய திட்டங்களை அறமுகம் செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் தரமான சலுகைகளை இந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜியோ, வோடபோன் நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் அருமையான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வரை தரும் ப்ரீபெய்ட் ப்ளான்கள் என்னென்ன என்ற தகவல்களை பற்றி பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.298-திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.298-திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது,பின்பு வரம்பற்றகுரல் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும்இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். இதுதவிர இந்த திட்டத்துடன் ஷா அக்காடமியின் கோர்ஸ் ஒன்றை இலவசமாக வழங்குகிறது ஏர்டெல்.

ஏர்டெல் ரூ.349-திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்ததிட்டம் 28நாட்கள் வேலிடிட்டி கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 28நாட்களுக்கும் அமேசான் ப்ரைம் போன்ற
சேவைகளை பயன்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.449 மற்றும் ரூ.698 திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தில் 2ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்ததிட்டம் 56நாட்கள் வேலிடிட்டியுடன் வெளிவருகிறது. இதுதவிர ஷா அக்காடமியின் இலவச கோர்ஸ், விங்க் மியூசிக்,மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்ற ஆப்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல் ரூ.698-ப்ரீபெய்ட் திட்டத்தில் 2ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டம் 84நாட்கள்வேலிடிட்டியுடன் வெளிவருகிறது. இதுதவிர பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ஜியோ
ஜியோ நிறுவனத்தின் 2ஜிபி ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 100 இலவச எஸ்.எம்.எஸ்களை ஒரு நாளைக்கு பயன்படுத்த தருகிறது. மேலும் ஆன் நெட் காலிங் மூலமாக இலவசமாக நீங்கள் ஜியோ நெட்வொர்க்கில் எந்த எண்ணுடனும் பேசிக் கொள்ளலாம்.
அதன்படி ஜியோ நிறுவனத்தின் ரூ.249-ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா நன்மைககிடைக்கும். பின்பு இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டியுடன் வெளிவருகிறது. மேலும் 1000 இலவசமாக நான்-ஜியொ
எண்களில் பேசிக் கொள்ள இயலும்.

ஜியோ ரூ.444-திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.444-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைககும், பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள்ஆகும். மேலும் இதில் 2000 FUP நிமிடங்கள் வெறொரு நெட்வொர்க்கில் பேசிக் கொள்ளலாம். அதேபோல் ரூ.599திட்டத்திலும் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும், மேலும் இந்த பேக்கில் 3000 இலவச நிமிடங்கள் இதர நெட்வொர்க்கில் பேசிக் கொள்ளலாம்.
இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும்.

வோடபோன்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.299-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும்,மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி28நாட்கள் ஆகும். குறிப்பாக ரூ.299திட்டதில் சப்ஸ்கிரிப்சன் மற்றும் ஜீ5 சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படும்.
வோடபோன் நிறுவனத்தின் ரூ.449-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகள் கிடைக்கும், குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். அதேபோல் வோடபோன் நிறுவனத்தின் ரூ.699-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும்,இந்த திட்டம் 84நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








