ஏர்டெல், ஜியோ, வோடபோன்: ரூ.400-க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் சிறந்த திட்டங்கள்.!
ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சிறப்பு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. ஆனாலும ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது, இருந்தபோதிலும் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் இதுவரை இலவச வரம்பற்ற கால் அழைப்பு நண்மைகளை வழங்கி வருகிறது.

சிறந்த திட்டங்கள்
இந்த ஆண்டு டெலிகாம் நிறுவனங்கள் கண்டிப்பாக பல்வேறு புதிய முயற்சிகளையும், புதிய திட்டங்களையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது ரூ.400-க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் டெலிகாம் நிறுவனங்களின் சிறந்த திட்டங்கள் எது என்று பார்ப்போம்.

ஜியோவின் ரூ.329- ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.329- ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டுள்ளது, மேலும் இந்ததிட்டத்தில் ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 300ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்கள், 1000எஸ்எம்எஸ் மற்றும்மொத்தம் 6ஜிபி அளவிலான 4ஜி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறர். இதனுடன் ஜியோடிவி, ஜியோசினிமா போன்றபிரபலமான ஆப்களுக்கான இலவச அணுகலுகம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் நிறுவனம்
வோடபோன் ரூ.379-ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோனின் ரூ.379-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்றகுரல் அழைப்புகள், 1000எஸ்எம்எஸ் மற்றும் 6ஜிபி அளவிலான 2ஜி/3ஜி/4ஜி டேட்டாவை மொத்தம் 84நாட்கள்
என்கிற செல்லுபடியின் கீழ் வழங்குகிறது. தவிர ரூ.499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே ஆப்பிற்கான இலவச அணுகலும்கிடைக்கும். மேலும் ஜி உள்ளடக்கத்தையும் தொகுக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.269-ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.269-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது எந்த குருP வரம்பு இல்லாத 4 ஜிபி அளவிலான டேட்டா,600எஸ்எம்எஸ் மற்றும் வோடபோன் ப்ளே ஆப் சந்தா, வரம்பற்ற குரல் அழைப்பு போன்ற நன்மைகளை வழங்குகிறது.
இந்த திட்டதின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். ஆனால் தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே இந்தரூ.269-திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ஏர்டெல் 399-ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399-ப்ரீபெய்ட் திட்டம்ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு,ஒரு நாளைக்கு 1.5ஜிபி அளவிலானடேட்டா, தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். மேலும் ரூ.399-ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஷா அகாடமியில் இலவச கோர்ஸ், வின்க் மியூசிக் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் மெம்பர்ஷிப் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ .100 கேஷ்பேக் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications