அம்பானி வச்ச டிவிஸ்டு! விலை உயர்த்திய பின்பும் ரூ.50 கம்மி.. Airtel கஸ்டமர்ஸ் கதறல்; Jio கஸ்டமர்ஸ் பெருமூச்சு!
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய 3 டெலிகாம் நிறுவனங்களுமே தங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான விலை உயர்வை அறிவித்துள்ளன. ஏர்டெல் மற்றும் ஜியோவின் விலை உயர்த்தப்பட்ட அல்லது திருத்தப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களானது ஜூலை 3 முதல் அமலுக்கு வந்தன. அதே நேரத்தில் விஐ நிறுவனத்தின் விலை உயர்த்தப்பட்ட ரீசார்ஜ் திட்டங்கள் ஜூலை 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. அதாவது இனிமேல், உங்களுக்கு நன்றாக தெரிந்த அல்லது வழக்கமாக நீங்கள் செய்யும் ரீசார்ஜ்களை இனிமேல் செய்ய முடியாது என்று அர்த்தம்.
புதிய விலையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் உங்களை நிச்சயம் குழப்பம் அடைய செய்யும். ஒருவேளை.. 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் எது மலிவானது? எது அதிக நன்மைகளை வழங்குகிறது? எந்த நிறுவனத்தின் திட்டத்தை ரீசார்ஜ் செய்வது நல்லது? என்கிற குழப்பம் உங்களுக்கும் இருந்தால்.. கவலையை விடுங்கள்! நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன்.. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய 3 நிறுவனங்களின்கீழ், திருத்தப்பட்ட விலையின்கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை நிர்ணயங்கள் என்ன? அவைகள் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? எது உங்களுக்கு பணத்தை மிச்சப்படுத்த உதவும்? என்கிற விவரங்கள் இதோ:
பார்தி ஏர்டெல்லின் ரூ.349 திட்டம் (Airtel Rs.349 Plan Details): இது மாதாந்திர அடிப்படையில்.. அதாவது 28 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கான முக்கிய ரீசார்ஜ் திட்டமாகும். நன்மைகளை பொறுத்தவரை, இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை தினமும் 1.5ஜிபி டேட்டா என்கிற விகிதத்தில் 28 நாட்களுக்கு மொத்தம் 42ஜிபி டேட்டா கிடைக்கும்.
வோடாபோன் ஐடியாவின் ரூ.349 திட்டம் (Vodafone Idea Rs.349 Plan Details): நாடு 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்ட பார்தி ஏர்டெல் நிறுவனத்தை போலவே.. இன்னும் 5ஜி அறிமுகத்தை உறுதி செய்யாத வோடபோன் ஐடியா நிறுவனமும் கூட அதன் 28 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை ஏர்டெல்லுக்கு இணையாக ரூ.349 ஆக உயர்த்தியுள்ளது.
விஐ ரூ.349 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் தினமும் 1.5ஜிபி டேட்டா போன்றவைகளை வழங்கும். கூடுதலாக இந்த திட்டத்தின்கீழ் டேட்டா ரோல்ஓவர் வசதி மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான அன்லிமிடெட் டேட்டா போன்றவைகளும் கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 299 திட்டம் (Jio Rs.299 Plan Details): இந்த பிரிவில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தான் அசல் வெற்றியாளர். ரீசார்ஜ் கட்டண விலை உயர்விற்கு பின்னரும் கூட ஜியோவின் 28 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தின் விலை நிர்ணயம் ஆனது ஏர்டெல் மற்றும் வோடாபோனை விட ரூ.50 மலிவானதாக இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இதுவும் ரிலையன்ஸ் ஏர்டெல் மற்றும் வோடாபோனை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் தினமும் 1.5ஜிபி டேட்டா என்கிற விகிதத்தில் 28 நாட்களுக்கு மொத்தம் 42ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ஆக 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி தான் உங்களுக்கு வேண்டும் என்றால்.. உங்களிடம் 3 நிறுவனங்களின் சிம் கார்டுகளும் உள்ளன என்றால்.. அவைகளில் ஏர்டெல் மற்றும் விஐ சிம் கார்டுகளை புறக்கணித்துவிட்டு ஜியோ சிம் கார்ட்டை ரூ.299 கொண்டு ரீசார்ஜ் செய்வது நல்லது!


Click it and Unblock the Notifications








