ஜியோ Vs ஏர்டெல் Vs வோடபோன் ஐடியா: ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மையை வழங்கும் நிறுவனம் எது?
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துவருகின்றன. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன என்று தான் கூறவேண்டும்.

தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களில் OTT பயன்பாடுகளுக்கான அணுகல், டேட்டா ரோல்ஓவர் வசதி, போனஸ் டேட்டா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் இந்த மூன்று நிறுவனங்களுமே ரூ.599 ப்ரீபெய்ட திட்டத்தைவைத்துள்ளன. இப்போது ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்த நிறுவனம் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.பின்பு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டிற்கான பிரீமியம் அணுகல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு,ஃபாஸ்டேக், இலவச ஹலோ ட்யூன்கள் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.599 திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.599 திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் நமைகளும் இந்த திட்டத்தில்கிடைக்கும். பின்பு Vi மூவிஸ்-க்கான அணுகல், 5ஜிபி போனஸ் டேட்டா, வார இறுதியில் டேட்டா ரோல்ஓவர் வசதி உள்ளிட்ட சிறப்பானசலுகைகளையும் வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.599 திட்டம்.

எந்த ப்ரீபெய்ட் திட்டம் சிறந்தது?
எல்லா திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபின், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக சலுகைகளை வழங்கவில்லை என்றாலும் கூட அதிகமான டேட்டா நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைமுக்கு இலவச அணுகலை வழங்குகிறது என்பதால் அதிக பயனர்களை இதை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வோடபோன் நிறுவனமும் 5ஜிபி போனஸ் டேட்டா, வார இறுதியில் டேட்டா ரோல்ஓவர் வசதியை வழங்குகிறது என்பதால் அதிக மக்கள் இதை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மூன்று நிறுவனங்களும் ரூ.599 திட்டத்தில் சிறப்பான நன்மைகளை தான் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications