Home
News

2GB கொஞ்சம் ஓரம்போ.. எக்ஸ்ட்ராவா 22GB டேட்டா.. வெறும் ரூ.180-க்கு அள்ளி கொடுக்கும் Jio ரீசார்ஜ்!

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று டெலிகாம் ஆப்ரேட்டர் நிறுவனங்களுமே.. தங்களிடம் ஏற்கனவே உள்ள "பழைய" ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ளவும், "புதிய" வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கவும்.. போட்டி போட்டுக்கொண்டு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன!

இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்களுமே ஒரே மாதிரியான விலையின் கீழ் பல வகையான ரீசார்ஜ் திட்டங்களை (Same Price Recharge Plans) தன்வசம் கொண்டுள்ளனர். பொதுவாக ஒரே மாதிரியான விலையில் கிடைக்கும் வெவ்வேறு திட்டங்கள் ஆனது "கிட்டத்தட்ட" ஒரே மாதிரியான நன்மைகளையே (Same Benefits) வழங்கும். ஆனால் ரூ.179 திட்டத்தில் அப்படி எதுவுமே இல்லை!

வெறும் ரூ.180-க்கு அள்ளி கொடுக்கும் Jio ரீசார்ஜ்!

கண்களை மூடிக்கொண்டு ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.179 திட்டத்தை (Jio Rs.179 Plan) ரீசார்ஜ் செய்யலாம். ஏனென்றால் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டமானது, போட்டியாளர்களான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடாபோன் ஐடியாவை (Vodafone Idea) விட 22ஜிபி டேட்டாவை அதிகமாக தருகிறது. அதெப்படி? இதோ விவரங்கள்:

ஏர்டெல் ரூ.179 திட்டத்தின் (Airtel Rs.179 Plan) விரிவான நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ஏர்டெல்லின் ரூ.179 ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதன்கீழ் மொத்தமாகவே வெறும் 2ஜிபி அளவிலா 4ஜி டேட்டா மட்டுமே கிடைக்கும். டேட்டாவை தவிர்த்து இது அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள், மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள், விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் (Hello Tunes) போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.

வெறும் ரூ.180-க்கு அள்ளி கொடுக்கும் Jio ரீசார்ஜ்!

வோடாபோன் ஐடியா ரூ.179 திட்டத்தின் (Vodafone Idea Rs.179 Plan) விரிவான நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: இதுவும் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் மொத்தமாகவே வெறும் 2ஜிபி அளவிலா 4ஜி டேட்டாவை மட்டுமே வழங்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, அன்லிமிட்ட் வாய்ஸ், 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

கடைசியாக வோடபோன் ஐடியாவின் ரூ.179 திட்டத்தின் கீழ் ஆஜ் தக், ஏபிபி, டிஸ்கவரி போன்ற 200 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் & நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வி மூவீஸ் அண்ட் டிவி ஆப் (Vi Movies & TV App) நன்மையையும் கிடைக்கும்.

வெறும் ரூ.180-க்கு அள்ளி கொடுக்கும் Jio ரீசார்ஜ்!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.179 திட்டத்தின் விரிவான நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ஜியோவின் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டமானது 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேற்கண்ட 2 திட்டங்களை விடவும் இது 4 நாட்கள் குறைவான வேலிடிட்டியை வழங்குகிறது. ஆனாலும் இது ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா என்கிற விகிதத்தில் மொத்தம் 24ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்குகிறது.

அதாவது ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவை விட 22ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இது தவிர்த்து ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிட்ட் வாய்ஸ் கால்களையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ரூ.179-ன் கீழ் JioTv (ஜியோ டிவி), JioCinema (ஜியோ சினிமா), JioSecurity (ஜியோ செக்யூரிட்டி) மற்றும் JioCloud (ஜியோ க்ளவுட்) நன்மைகளும் கிடைக்கும்.

எந்த ரீசார்ஜ் பெஸ்ட்? சந்தேகத்திற்கு இடமின்றி ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.179 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் தான் பெஸ்ட் ரீசார்ஜ் ஆகும். ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் ரூ.179-ஐ விட ஜியோவின் ரூ.179 ஆனது "நம்ப முடியாத அளவிற்கு" அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. ஒருவேளை உங்களுக்கு டேட்டா முக்கியமல்ல; வேலிடிட்டி தான் முக்கியம் என்றால் ஏர்டெல் அல்லது விஐ திட்டத்தை தேர்வு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Vs Airtel Vs Vodafone Idea Rs 179 Plan Comparison Which is Best Rechrage Under Rs 200
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X