Jio vs Airtel vs Vodafone: ரூ.200-க்கு கீழ் போட்டிப்போட்டு திட்டங்கள் அறிமுகம்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு விலை உயர்த்தி வருவதோடு சலுகைகளையும் அறிவித்துக் கொண்டே வருகின்றன. இதன் மூலம் எந்த நிறுவனத்தின் திட்டம் சிறந்தது என்று அறியாமுடியாத குழப்ப நிலை நீடித்து வருகிறது.

ரூ .200 க்கு கீழ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்:
ஜியோ ரூ 199 மதிப்புள்ள ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது, இது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் 42 ஜிபி டேட்டாவைப் வழங்கப்படுகிறது. அதேபோல் குறிப்பாக ஜியோ தங்கள் பயணர்களுக்கு என ரூ.149 திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் 24 நாட்களுக்கு 24 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதாவது ஒரு நாளுக்கு 1 ஜிபி என்ற வீதம் வழங்கப்படுகிறது.

குரல் அழைப்புகள் விவரம்
மேலும் இந்த அனைத்து சலுகைகளிலும் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அந்த திட்டத்திற்கு ஏற்ப நிமிட அவகாசங்கள் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ .200 க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் திட்டங்கள்:
ஐடியாவுடன் இணைந்த வோடபோன், ரூ .149 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வருகிறது, இது பயனர்கள் 2 ஜிபி டேட்டாவையும் வரம்பற்ற குரல் அழைப்போடு ஒரு மாதத்திற்கு 300 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. பயனர்கள் ரூ .999 மதிப்புள்ள ஜீ 5 சந்தாவை இலவசமாகப் பெறுவதால் நிறுவனம் இதன்மூலம் கூடுதல் நன்மையை வழங்குகிறது. அதோடு ப்ரீபெய்ட் பயனர்கள் வோடபோன் ப்ளே பயன்பாட்டிற்கும் அணுகலைப் பெறுவார்கள்.

ரூ. 199 திட்டம் அறிமுகம்
அடுத்த திட்டத்தின் மதிப்பு ரூ 199 ஆகும், இது பயனர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவை இலவச குரல் அழைப்போடு வழங்குகிறது. வோடபோன் ப்ரீபெய்ட் பயனர்கள் ஜீ 5 சந்தாவின் கூடுதல் நன்மை மற்றும் வோடபோன் ப்ளே பயன்பாட்டில் இலவச உள்ளடக்கத்தையும் பெறுகிறார்கள். இந்த திட்டமானது 21 நாட்கள் செல்லுபடியாகும்.

ஏர்டெல் ரூ.200 க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் திட்டங்கள்:
ஏர்டெல் ரூ.149 திட்டத்தை வழங்குகிறது, இது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு முழுவதுமாக 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் சந்தாதாரர்கள் 300 எஸ்எம்எஸ் இலவசமாகவும் விங்க் மியூசிக் ஆப் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டையும் பெறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications