Home
News

மாதாந்திரம் ரூ.160 செலவில் 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. தெறிக்கவிடும் 3 வேல்யூ ரீசார்ஜ் திட்டங்கள்!

2024 ஆம் ஆண்டில், அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் மட்டுமே இந்திய டெலிகாம் துறையில் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை அறிவிக்காத ஒரே நிறுவனமாகும். மீதமுள்ள 3 தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவைகள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை 25% வரை உயர்த்தி, இதோடு 4 மாதங்கள் ஆகிறது.

இதன் விளைவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைக்குள் நுழைந்தவர்கள் போக, ஏனையோர் அதிவேக பிராட்பேண்ட் கனெக்ஷனை பெற தொடங்கி உள்ளனர்.ஒவ்வொரு மாதம் ரூ.400 - ரூ.500 க்கு ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக பிராட்பேண்ட் கனெக்ஷனை தேர்வு செய்வது அவ்வளவு முட்டாள்தனமான காரியம் அல்ல!

மாதாந்திரம் ரூ.160 செலவில் 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்!

இருந்தாலும் கூட உங்களுடைய ப்ரீபெய்ட் நம்பரை ரீசார்ஜ் செய்யாமல் இருக்க முடியாது. பிராட்பேண்ட் வழியாக ஹை ஸ்பீட் இண்டர்நெட் கிடைப்பதால், அதன்கீழேயே வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்காக தஞ்சம் அடைய முடியாது. உங்கள் பிராட்பேண்ட் லிமிட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வராமலா இருக்கும். இந்த இடத்தில் தான் வேல்யூ ரீசார்ஜ் பிளான்கள் நமக்கு கைகொடுக்கின்றன .

சுவாரசியமாக ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ (Jio Vs Airtel Vs Vodafone) ஆகிய மூன்று நிறுவனங்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில் வேல்யூ ரீசார்ஜ் பிளான்களை கொண்டுள்ளன. குறிப்பாக ஒப்பீட்டளவில் ஜியோ மட்டுமே ரூ.100 மலிவான (அதே சமயம் சற்றே குறைவான வேலிடிட்டியை வழங்கும்) திட்டத்தை கொண்டுள்ளது. அதென்ன திட்டங்கள்? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஜியோவின் ரூ.1,899 ரீசார்ஜ் திட்டம்: மாதந்தோறும் ரூ.158 என்கிற செலவின்கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஜியோவின் ரூ.1,899 திட்டமானது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தம் 24ஜிபி டேட்டா, லிமிட்டை தாண்டிய பின்னர் 64 கேபிபிஎஸ் ஸ்பீடில் அன்லிமிடெட் இண்டர்நெட் ஆகிய நன்மைகளை 336 நாட்களுக்கு வழங்கும்.

கூடுதலாக இது ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ க்ளவுட் (Jio Cloud) ஆகியவற்றிற்கான இலவச அணுகல்களையும் வழங்கும். ஒருவேளை உங்களுக்கு 24ஜிபி அளவிலான டேட்டாவை மீறிய தேவைகள் ஏற்பட்டால்.. அதாவது கூடுதல் டேட்டா (Extra Data) தேவைப்பட்டால் ரூ.19 க்கு 1 ஜிபி டேட்டா அல்லது ரூ.29 க்கு 2ஜிபி கூடேட்டாவை வழங்கும் ஆட்-ஆன் பேக்கேஜ்களை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஏர்டெல்லின் ரூ.1,999 ரீசார்ஜ் திட்டம்: மாதந்தோறும் ரூ.166 என்கிற செலவின்கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஏர்டெல்லின் ரூ.1,899 திட்டமானது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தம் 24ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 365 நாட்களுக்கு வழங்கும். கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் ரூ.22 க்கு 1ஜிபி அல்லது ரூ.33 க்கு 2ஜி ஆகிய டேட்டா பேக்களை ரீசார்ஜ் செய்யலாம்.

வோடாபோன் ஐடியா ரூ.1,999 ரீசார்ஜ் திட்டம்: ஏர்டெல்லை போலவே இதுவும் மாதந்தோறும் ரூ.166 என்கிற செலவின்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தம் 24ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 365 நாட்களுக்கு வழங்கும். கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் ரூ.26 க்கு 1.5ஜிபி அல்லது ரூ.33 க்கு 2ஜி டேட்டாவை வழங்கும் பேக்களை ரீசார்ஜ் செய்யலாம்.

மேற்கண்ட ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா அணுகலை (Unlimited 5G Data Access) வழங்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இரு நிறுவனங்களுமே ஒரு நாளைக்கு குறைந்தது 2ஜிபி டேட்டாவுடன் வரும் ரீசார்ஜ் திட்டங்களில் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா அணுகலை வழங்குகின்றன.

Best Mobiles in India

English summary
Jio Vs Airtel Vs Vodafone Best Value Recharge WFH 365 Days Validity Plan 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X