தினசரி 1ஜிபி டேட்டா வழங்கும் டெலிகாம் நிறுவங்களின் அட்டகாச திட்டங்கள்.!
ஜியோ, வோடபோன்,ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் சிறப்பான டேட்டா நன்மைகளை வழங்கிவருகிறது, ஆனால் ஜியோ நிறுவனம் மட்டும் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது, மற்ற நிறுவனங்கள் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்யவில்லை.

தினசரி 1ஜிபி டேட்டா
அன்மையில் ஏர்டெல் நிறுவனம் அருமையான பட்ஜெட் திட்டங்களை அறிமுகம் செய்தது, திட்டங்களுடன் சில சிறப்பு சலுகைகளையும் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது ஜியோ, வோடபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களைப் பார்ப்போம்.

ஜியோ நிறுவனம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.149-திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, குறிப்பாக இந்த திட்டத்தில்வேலிடிட்டி 24நாட்கள் ஆகும். மேலும் ஜியோ டூ ஜியோவிற்கும் மட்டும் இலவச கால் அழைப்புகள் இந்த திட்டத்தில்
வழங்கப்பட்டுள்ளது. பின்பு மற்ற நெட்வொர்க்குகளுக்கு 300நிமிட குரல் அழைப்பு இலவசமாக இந்த திட்டத்தில்
வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் சில சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.

ஏர்டெல் நிறுவனம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.219-திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இந்த திட்டதின் வேலிடிட்டி28நாட்கள் ஆகும். மற்ற சலுகைகள் பற்றி பேசுகையில் தனசரி 100எஸ்எம்எஸ்,வரம்பற்ற குரல் அழைப்புகள் உள்ளிட்டசலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர இலவச ஹலோ ட்யூன்ஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பயன்பாடுமற்றும் வரம்பற்ற விங்க் இசை ஆகியவற்றுடன் வருகிறது இந்த ஏர்டெல் ரூ.219-திட்டம்.

வோடபோன் நிறுவனம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.199-திட்டதில் தினசரி 1ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது, இந்த திட்டதின் வேலிடிட்டி21நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற கால் அழைப்புகள்,தினசரி 100எஸ்எம்எஸ், உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனத்தின் ரூ.219-திட்டதில் தினசரி 1ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது, இந்த திட்டதின் வேலிடிட்டி28நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற கால் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ், உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது.

எது சிறந்தது?
ஜியோ தவிர, ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவுகளுக்கிடையேயான ஒப்பீட்டைப் பார்க்கும்போது, மற்ற இரண்டு டெல்கோக்களும் நீண்ட கால செல்லுபடியை வழங்குகின்றன மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பிற நெட்வொர்க்குகளுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன. இருப்பினும், ஜியோ திட்டத்தின் விலை ரூ. 149 ஆகவும்,மற்றவை ரூ. 219 மற்றும் ரூ. 199. எனவே, பயனர்களின் தேர்வுதேவைகளைப் பொறுத்து அமையும்.


Click it and Unblock the Notifications








