Jio vs Airtel vs Vi vs BSNL: மலிவு விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டம்.!

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த மூன்று நிறுவனங்களும் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் விரைவில் 4ஜி சேவையை அனைத்து இடங்களிலும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ,ஏர்டெல், வோடபோன் ஐடியா

ஜியோ,ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்தவண்ணம் உள்ளன. மேலும் இந்நிறுவனங்கள் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. அந்ததிட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவுக்கு எதிராக செய்திகள் பரப்பினால் இது தான் முடிவு.. இந்திய அரசாங்கம் அதிரடி.. 35 சேனல்கள் முடக்கம்..இந்தியாவுக்கு எதிராக செய்திகள் பரப்பினால் இது தான் முடிவு.. இந்திய அரசாங்கம் அதிரடி.. 35 சேனல்கள் முடக்கம்..

ஜியோ ரூ.385 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.385 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.385 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் 6ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். பின்பு 1000 எஸ்எம்எஸ் நன்மைகள், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட்,
ஜியோ செக்யூரிட்டி போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.385 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 64Kbps ஆக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.385 ப்ரீபெய்ட் திட்டம்.

அவரை பாத்து நிறைய கத்துக்கணும்: ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையின் தரமான சேவை: ஆனந்த் மஹிந்திரா புகழாரம்.!அவரை பாத்து நிறைய கத்துக்கணும்: ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையின் தரமான சேவை: ஆனந்த் மஹிந்திரா புகழாரம்.!

ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. குறிப்பாக ஜியோவைப் போலவே, ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தில் 6ஜிபி அதிவேக டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 900 வெளிச்செல்லும் SMS உடன் வருகிறது இந்த ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டம் Amazon Prime வீடியோ மொபைலின் 30 நாள் இலவச சோதனை, FASTagfree இல் ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்கள், Wynk மியூசிக் சந்தா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஸ்மார்ட்போனை ஏன் கேஸ் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இது ரிஸ்க்கா இல்ல சாமர்த்தியமா?உங்கள் ஸ்மார்ட்போனை ஏன் கேஸ் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இது ரிஸ்க்கா இல்ல சாமர்த்தியமா?

வோடபோன் ஐடியா ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. குறிப்பாக 6ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 1000 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 64Kbps ஆக குறைகிறது. மேலும் Vi டிவி மற்றும் திரைப்படங்களுக்கான இலவச சந்தாவையும், காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச இரவு டேட்டா உபயோகத்தையும் வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம்.

விரைவில் இந்தியாவில் அறிமுகம் உறுதி., வருகிறது ஒப்போ ரெனோ 7 சீரிஸ்- 12 ஜிபி ரேம், 50எம்பி சோனி கேமரா: விலை இதோவிரைவில் இந்தியாவில் அறிமுகம் உறுதி., வருகிறது ஒப்போ ரெனோ 7 சீரிஸ்- 12 ஜிபி ரேம், 50எம்பி சோனி கேமரா: விலை இதோ

பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் (வேலிடிட்டி) காலம் சரியாக 84 நாட்கள் இல்லை. ஆனாலும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் திட்டத்தை விட சற்று கூடுதலான நன்மைகளை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 81 நாட்கள் ஆகும். பின்பு பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்நிறுவனம் மலிவு விலை பல அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio vs Airtel vs Vi vs BSNL: Prepaid plan with 84 days validity at affordable prices.!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X