Just In
- 29 min ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 1 hr ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
- 3 hrs ago
இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!
- 19 hrs ago
மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!
Don't Miss
- News
பீமா-கொரேகான் வழக்கு.. 6 மாதம் நிபந்தனை ஜாமீன்.. 81 வயதான வரவர ராவ் 2 வருடத்திற்கு பின் விடுதலை!
- Lifestyle
வார ராசிபலன் 07.03.2021 முதல் 13.03.2021 வரை - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…
- Automobiles
மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?
- Movies
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏர்டெல் Vs ஜியோ Vs விஐ: ரூ.599, ரூ.598 விலையில் சிறந்த சலுகை வழங்கும் நிறுவனம் எது?
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான திட்டங்களை வைத்துள்ளன, ஆனால் சலுகைகளில் தான் கொஞ்சம் மாறுபாடுகள் இருக்கும். மேலும் இந்த ஐபிஎல் 2020 போட்டிகள் தொடங்கும் முன்பு பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் சிறப்பு டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் பட்ஜெட் விலையில் பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த சில மாதங்களில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கணிசமாக வாடிக்கையாளர்களை இழந்துள்ளன, அதேசமயம் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வாரம் ஒருமுறை சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது.

மேலும் வோடபோன் ஐடியா, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.599 மற்றும் ரூ.598 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த திட்டங்களில் சிறந்த டேட்டா நன்மை மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.
Mi 10T சீரிஸ்க்கான வெயிட்டிங் முடிஞ்சுது.. கலக்கலாக இந்தியாவில் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

ஜியோ ரூ.598 பிரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.598-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 112ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் போனஸ் டேட்டா நன்மை வழங்கப்படவில்லை. மேலும் Jio to Jio இலவச கால் அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000 FUP நிமிடங்கள் கிடைக்கும். ஜியோ ரூ.598-திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கும், பின்பு மாதத்திற்கு ரூ.399 செலவாகும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பியின் இலவச 1 ஆண்டு சந்தாவும் உங்களுக்குக் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.599 பிரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.599-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். இந்த திட்டம் இந்தியாவிற்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்பை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.599 திட்டத்தில் OTT நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. OTT நன்மைகளில் சேர்க்கப்பட்டுள்ளது டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டங்களின் இலவச சந்தா. அதனுடன், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், ஹெலோடூன்ஸ், விங்க் மியூசிக், ஷா அகாடமி 1 வருடம், மற்றும் ஃபாஸ்டேக் உடன் ரூ.150 கேஷ்பேக் உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.599 பிரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.599-திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இந்த திட்டத்தில் போனஸ் நன்மையாக 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.599-திட்டத்தில் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது. எம்.பி.எல் இல் விளையாடுவதற்கு வாடிக்கையாளருக்கு ரூ.125 உறுதிப்படுத்தப்பட்ட போனஸ் ரொக்கம் கிடைக்கிறது, மேலும் Zomato-விலிருந்து உணவு ஆர்டர்களுக்கு தினசரி ரூ.75 தள்ளுபடி உள்ளது. ஆனால் Vi-லிருந்து வரும் ரூ.599 திட்டத்தில் OTT நன்மை எதுவும் சேர்க்கப்படவில்லை.

ஜியோ மற்றும் ஏர்டெல்லின் திட்டங்களை ஒப்பிடுவது உண்மையில் கடினம், ஏனெனில் அவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குகின்றன. Vi ஐப் பொறுத்தவரை, ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்குப் பின்னால் உள்ளது என்பது தெளிவாக உள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190