Jio vs Airtel vs VI: 1 மாத ரீசார்ஜ்களை செய்யாதீர்கள்! மாறாக பட்ஜெட் விலையில் இதை செய்யுங்கள்!
ரீசார்ஜ் செய்யும் போது, எப்போதும் 1 மாத ரீசார்ஜ்களை செய்யாமல், அதிக வேலிடிட்டி கிடைக்கும் நீண்ட நாள் திட்டங்களை தேர்வு செய்வது தான் சிறிய லாபத்தை வழங்குகிறது. அப்படி, உங்களுக்கு 2 மாத வேலிடிட்டி உடன் கிடைக்கும் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்யும் பழக்கம் இருக்கிறதா? இதை தொடர்ந்து மீண்டும்-மீண்டும் மாதம் தவறாமல் ரீசார்ஜ் செய்வதனால், உங்களுக்கு கடுப்பாக இருக்கிறதா? அல்லது சோர்வாக இருக்கிறதா? இந்த விஷயம் தெரிந்தால், நீங்கள் மாதம் தோறும் தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றதைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இதற்காக, நீங்கள் ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை ஏற்க வேண்டியது என்ற அவசியமும் இல்லை.

ஜியோ vs ஏர்டெல் vs விஐ (Jio vs Airtel vs VI) என்று இந்த 3 நெட்வொர்க்குகளில் நீங்கள் எதை வைத்திருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மாதாந்திர ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தை குறைந்தது 2 மாத வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்களால் சரி செய்ய முயலாமல். இது உங்கள் சிரமத்தை, உங்கள் பட்ஜெட் பாதிக்காமல் கொஞ்சம் சமாளிக்க உதவும்.
சரி, எந்த திட்டங்கள் குறைந்த விலையில் 2 மாத வேலிடிட்டியை தருகிறது என்று பார்க்கலாம். இன்று நாங்கள் உங்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் ரீசார்ஜ் திட்டங்களை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கொண்டு வந்துள்ளோம். இந்த திட்டத்தில் இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற டேட்டா உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. மூன்று நிறுவனங்களில் எந்தத் திட்டம் சிறந்தது என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.
ஏர்டெல் ரூ. 479 திட்டம்
2 மாத்திற்கு நெருக்கமாக 56 நாள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் 479 ரூபாய்க்கு வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இது தவிர, Wynk Music மற்றும் Free Hello Tune போன்ற கூடுதல் இலவச நன்மைகளையும் வழங்குகிறது.

ஜியோ ரூ. 479 திட்டம்
ஜியோவில் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இதில், 100எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 1.5ஜிபி டேட்டா தினமும் கிடைக்கிறது. இது தவிர, ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான இலவச அணுகல் கிடைக்கிறது. இதன் செல்லுபடியாகும் காலமும் 56 நாட்கள் ஆகும்.
VI ரூ. 479 திட்டம்
Vodafone Idea அதாவது Vi நிறுவனம் ரூ. 479 விலையில் ரீசார்ஜ் திட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் ஆகும். இதில் வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா பலன்கள் என்று எல்லாமே கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டாவின் நன்மை கிடைக்கும். இது தவிர, Vi இன் பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது. இதனுடன் டேட்டா டிலைட் மற்றும் வீக்-எண்டு டேட்டா ரோல்ஓவர் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








