ரூ. 50 விலைக்குள் டேட்டா, டாக் டைம், SMS வேண்டுமா? Airtel, Jio, Vi கீழ் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் மிகவும் மலிவு விலை திட்டங்களான சில திட்டங்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப்போகிறோம். Jio, Airtel மற்றும் Vi ஆகிய மூன்று நிறுவனங்களும் தனது பயனர்களுக்கு ஏராளமான பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் சில பயனர்களுக்கு மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் திட்டங்கள் மீது தான் எப்போதுமே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அப்படி, இந்த மூன்று நிறுவனத்திடமிருந்து நமக்கு ரூ.50 விலைக்குள் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றித் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

50 ரூபாய்க்கும் குறைவான செலவில் டேட்டா, டாக் டைம் மற்றும் SMS வேண்டுமா?
வெறும் 50 ரூபாய் செலவில் உங்களுக்கு டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் SMS கிடைக்கும் நன்மைகள் என்று பல நன்மைகள் கிடைக்கிறது. பட்ஜெட் விலை மற்றும் மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாய் அமையும். குறிப்பிட்ட சில காலத்திற்கு முன்பு இந்த மலிவு திட்டங்கள் நிறுவனத்தால் நிறுத்தப்பட்டது. ஆனால், இவை இப்போது மீண்டும் பயன்படுத்தக் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 39 ப்ரீபெய்ட் திட்டம்
Jio நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மிகவும் மலிவு திட்டம் என்றால் அது இந்த ரூ. 39 திட்டம் மட்டும் தான். ஜியோவின் இந்த ரூ. 39 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் உங்களுக்குத் தினமும் 100 எம்பி வேகம் கொண்ட அதிவேக டேட்டா நன்மை கிடைக்கிறது. இத்துடன் உங்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் செல்லுபடியாகும் இலவச அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையையும் இந்த திட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை எத்தனை நாட்கள்
இந்த திட்டத்துடன் உங்களுக்கு SMS நன்மைகளும் கிடைக்கிறது. இதன் படி, உங்களுக்குத் தினமும் 100 SMS நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டம் மலிவு விலை திட்டம் என்பதனால் இது வெறும் 14 நாட்கள் மட்டும் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் அதிவேக டேட்டா தீர்ந்த பின், இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டம் JioPhone பயனர்களுக்கு மட்டும் இப்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் வழங்கும் ரூ. 49 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் வழங்கும் மலிவு விலை திட்டத்தின் விலை வெறும் ரூ. 49 மட்டுமே. இந்த திட்டமும் மலிவு விலை திட்டம் என்பதனால் இதன் வேலிடிட்டி குறைவாக இருக்கும் என்று நினைக்கலாம், ஆனால் இது அப்படியானது அல்ல. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு ரூ. 38.52 மதிப்புடைய டாக் டைம் உடன் வருகிறது.

ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களின் கவனத்திற்கு
இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு 100 எம்பி டேட்டா நன்மை கிடைக்கிறது. இந்த திட்டம் நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் நிறுவனத்தின் இணையப் பக்கத்தைப் பார்வையிடுங்கள். ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுடன் உங்களுக்கு சிறந்த திட்டம் வேண்டும் என்றால் ரூ. 79 திட்டத்தை தேர்வு செய்யலாம்.

வோடபோன் ஐடியா (Vi) ரூ. 49 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மலிவு விலை திட்டம் என்றால் அது ரூ. 49 ப்ரீபெய்ட் திட்டமாகும். வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பேசுகையில், இது ரூ. 38 மதிப்பிலான டாக் டைம் நன்மை உடன் வருகிறது. இந்த திட்டம் 14 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது.

இதை கவனிக்க மறக்காதீர்கள் மக்களே
இந்த திட்டம் 100 Mb டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டத்தை நீங்கள் நிறுவனத்தின் ஆப்ஸ் மூலம் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்குக் கூடுதலாக 200 Mb டேட்டா கிடைக்கும். இத்திட்டத்தில் SMS நன்மை எதுவும் கிடையாது என்பதை மறக்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications