Jio Vs Airtel Vs VI: பட்ஜெட் விலை திட்டங்களில் எது சிறந்தது? குழப்பமே வேணாம்!
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒரே விலைப் பிரிவில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதால், எந்த நிறுவனம் சரியான விலையில் சிறந்த திட்டத்தை வழங்குகிறது என்பதில் குழப்பம் ஏற்படும். பெரும்பாலான பயனர்களின் விருப்பங்கள் பட்ஜெட் விலை ரீசார்ஜ் திட்டங்களாகவே இருக்கிறது. அதன்படி ரூ.200 விலைப் பிரிவில் ஜியோ, விஐ மற்றும் ஏர்டெல் வழங்கும் சிறந்த ரீசார்ஜ் ஒப்பிட்டு விரிவாக பார்க்கலாம்.

ரூ.209 விலைப்பிரிவு ரீசார்ஜ் திட்டம்
தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொறுத்தவரை ஜியோ சிறந்ததாகவே இருக்கிறது. ரூ.209 விலை ஜியோ 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. விஐ நிறுவனம் ரூ.219 விலையில் 21 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல்அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் பயனர்களுக்கு கிடைக்கிறது.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.209 ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 21 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டம் 21 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல் வரம்பற்ற குரலழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.179 என்ற ஒரே விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்
அதேபோல் ஜியோ வழங்கும் ரூ.179 ரீசார்ஜ் திட்டமானது 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டமும் தினசரி 1 ஜிபி டேட்டாவை பயனர்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகிறது. விஐ நிறுவனமும் இதே விலையில் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது.

அதாவது விஐ ரூ.179 திட்டமானது மொத்தமாகவே 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ்-கள் மற்றும் வரம்பற்ற குரல்அழைப்பு நன்மைகளை வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டம் கிடைத்தாலும் மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா தான் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனமும் ரூ.179 விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா தான் வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுன் வருகிறது. மூன்று நிறுவனங்களும் ரூ.179 விலையில் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இதில் சிறந்த திட்டமாக ஜியோ ரீசார்ஜ் திட்டம் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ரூ.149 விலைப்பிரிவு ரீசார்ஜ் திட்ட விவரங்கள்
ஜியோ வழங்கும் ரூ.149 ரீசார்ஜ் திட்டமானது 20 நாட்கள் வேலிடிட்டியுன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா என்ற வீதம் மொத்தம் 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் விஐ மற்றும் ஏர்டெல் நிறுவனமும் ரூ.149 விலையில் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது.

விஐ வழங்கும் ரூ.149 ரீசார்ஜ் திட்டமானது மொத்தம் 21 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

ஏர்டெல் ரூ.155 ரீசார்ஜ் திட்டமானது 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. வரம்பற்ற குரல்அழைப்பு உட்பட 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கூடுதலாக வழங்கப்படுகிறது.

முழுமையான 30 நாட்கள் திட்டத்தில் எது சிறந்தது?
டிராய் உத்தரவுப்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முழுமையான 30 நாட்கள் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தது. அதன்படி ஜியோ வழங்கும் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டமானது ரூ.296 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மொத்தமாக 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

அதேபோல் விஐ நிறுவனம் வழங்கும் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டம் ரூ.327 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டமும் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 25 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஜியோ போன்ற வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் வழங்கினாலும் ஜியோவை விட விஐ வழங்கும் இந்த திட்டத்தின் விலை உயர்வாக இருக்கிறது.

ஏர்டெல் வழங்கும் 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டமானது ரூ.296 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் மொத்தமாக 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.


Click it and Unblock the Notifications