ஜியோ vs ஏர்டெல்.. ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்.. அன்லிமிடெட் சலுகைகள்.. எதை தேர்வு செய்வது நல்லது?
ஜியோ (jio) மற்றும் ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக கம்மி பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் தற்போது ஓடிடி சந்தாவுடன் வரும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்குத் தான் அதிக வரவேற்பு உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இதில் எந்த நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid Plan) ட்ரூ 5ஜி அன்லிமிடெட் திட்டங்கள் (True 5G Unlimited Plans) பிரிவின் கீழ் இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது ஜியோ. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படும்
இந்த ஜியோ திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.349 Prepaid Plan) ஆனது தினமும் 1.5 ஜிபி டேட்டா (Daily 1.5 GB Data) நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 42ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 64 கேபிபிஎஸ்-ஆக குறையும்.
அதேபோல் இது அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டமாக இருக்கிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ், ஆப்பிள் மியூசிக் (Apple Music), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) போன்ற நன்மைகளும் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எது சிறந்தது?
இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் ஜியோ நிறுவனம் தான் அதிக சலுகைகளை வழங்குகிறது. அதாவது அதிக டேட்டா மற்றும் கூடுதல் சலுகைகள் வரை ஜியோ நிறுவனம் தான் வழங்குகிறது. எனவே ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications
